உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நிகழ்கால வினைவடிவம்

66

35

'அற்றேல் கின்று என்பது றன்னகரங் கொண்டிருக்கவும் அதன் திரிவில் தந்நகரம் வந்த தெங்ஙனமெனின் தந்து - தந்து, வந்நு - வந்நு எனத் தந்தநகரம் பயின்றுவரும் சேரநாட்டு வழக்குப்பின்பற்றி யென்க. செய்நன் என்னும் வடிவு தோன்றியதே மூக்கொலிமிக்குப் பியலும் சேரநாட்டில்தான்.

இதுகாறும் கூறிவற்றால், 'கின்று' என்னும் நிகழ்கால இடைநிலை திரிந்தோ திரியாதோ தொல்காப்பியர் காலத்திலும் வழங்கிற்றென்றும், அவர் நிகழ்காலத்திற்குத் தனி வினை வடிவு கூறாதது குன்றக் கூறலாமென்றும் அறிந்துகொள்க.

தமிழ்ப்பொழில் 1956 சூன், சூலை