56
தமிழியற் கட்டுரைகள் ஒன் என்பதும் ஒன்று என்பதும் ஒல் என்னும் ஒரே அடிப்பிறந்த சொற்களாம்.
ஒ-ஒல், ஒத்தல்-பொருந்துதல். ஒல்லுதல், பொருந்துதல். ஒல்-ஒன். ஒப்பு நோக்க: வெல்-வென். ஒல்-து-ஒன்று, ஒ, நோ: நல்து - நன்று. ஒன்னுதல் பொருந்துதல், ஒன்னார் – பொருந்தார், பகைவர், ஒல்-ஒள்-ஒண். ஒன்ணுதல் - பொருந்துதல். ஒன் -து- ஒட்டு, ஒண்டு.
உம் என்பது கூடுதல் பொருள் கொண்டிருப்பதை, 'அழகனும் முருகனும்,' 'வந்து போயும்' என்னும் எண்ணுமைத் தொடர்களால் உணர்க.
பல உகரமுதற் சொற்கள் அகரமுதல வாகத் திரியும். எடு: முடங்கு - மடங்கு, குடும்பு - கடும்பு, குடம் -கடம். இங்ஙனமே உம் என்பதும் அம் எனத் திரிந்து வெவ்வேறு சொற்களைப் பிறப்பிக்கும்.
—
அம் - அமல், அமலுதல் - நெருங்குதல். அமல் - நிறைவு, அமலை - திரளை. அமைதல் நெருங்குதல், அமைவு - - நெருங்குதல், அமைவு – நிறைவு, அமல் -அமர், அமர்தல் - நெருங்குதல்.
பிற்காலத்தில் படர்க்கைப் பன்மையீறுகளாக எழுந்த, ஆர், கள் என்னும் சொற்களும் கூடுதல் பொருள் குறித்தனவாகவே யிருத்தல் காண்க. ஆர்தல் பொருந்துதல், நிறைதல். அர் என்பது ஆர் என்பதன்
குறுக்கம்.
—
கள்ளுதல் பொருந்துதல், ஒத்தல், கள்ள-ஒக்க, போல. 'கள்ள' என்பது ஓர் உவமையுருபு.
'கள்ளக்கடுப்ப ஆங்கவை எனாஅ”
கள் – அம் - களம் - கூட்டம், கூடுமிடம்.
(தொல். உவ.11)
சில மகர மெய்யீற்று அஃறிணைப் பெயர்கள் னகர மெய்யீறாகத்
திரியும். இது ஒருவகைப் போலியாம். இதை,
"மகரத் தொடர் மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப புகர்றக் கிளந்த வஃறிணை மேன” (மொழி.49) என எதிர்மறை வகையில் தொல்காப்பியரும் "மகரவிறுதி யஃறினைப் பெயரின்
னகரமோ டுறழா நடப்பன வுளவே." (எழுத். 122)
என உடன் பாட்டு வகையில் நன்னூலாரும் எடுத்துக் கூறினர்.
தொல்காப்பிய நூற்பாவிற்கு,
உதாரணம்: எகின் செகின் விழன் பயின், குயின், அழன் புழன், கடான் வயான், எனவரும்.... நிலம் நிலன், பிலம் பிலன், கலம் கலன், வலம் வலன்,