சிந்தாமணியின் செவ்விய வனப்பியல்
(2) அருந்தொடர் மொழிகள்:
73
தேவர் சொல்லாட்சித் திறனில் மிக விஞ்சியவராதலின், வேண்டியவா றெல்லாம் விழுமிய தொடர்மொழிகளைப் புனைந்து கொள்கின்றார்:
எ-டு : கட்டழலெவ்வம்-இணரெரி தோய்வன்ன இன்னா.
பொன்
வண்ணப்புழுக்கல்-பருப்புச்சோறு.
நாண் மெய்க்கொண்டீட்டப்பட்டார்-நாணமே வடிவாய பெண்டிர்.
2. பொருட்டிறம்:
(1) கலைகள்:
JJ
718
‘நீர்நின் றிளகிற் றிதுவேண்டா; நீரின் வந்த திதுபோக; வார்நின் றிளகு முலையினாய்! வாட்புண் ணுற்ற திதுநடக்க; ஒரு முருமே றிதுவுண்ட தொழிக; ஒண்பொ னுகுகொடியே! சீர்சால் கணிகை சிறுவன்போற் சிறப்பின் றம்ம விது,' என்றான்.' இது இசை பற்றியது. இங்ஙனமே, யாழ் மரத்தின் ஏனைக் குற்றங்களும், நரப்புக்குற்றங்களும், யாழுறுப்புகளும், யாழ்வகைகளும், பாடும் முறையும் காந்தருவதத்தையாரிலம்பகத்தில் கலைமுறைப்படி கூறப்பட்டுள்ளன.
"தோற்பொலி முழவும் யாழும் துளைபயில் குழலு மேங்கக் காற்கொசி கொம்பு போலப் போந்துகைத் தலங்கள் காட்டி மேற்பட வெருவி நோக்கித் தானையை விட்டிட் டொல்கித் தோற்றினாள் முகஞ்செய் கோலம் துளக்கினாள் மனத்தை யெல்லாம்.” 675 இது கூத்துப்பற்றியது.
"பொழிந்துநஞ் சுகுத்த லச்சம் இரைபெரு வெகுளி போகம் கழிந்துமீ தாடல் காலம் பிழைப்பென வெட்டி னாகும்; பிழிந்துயி ருண்ணுந் தட்டம் அதட்டமாம் பிளிற்றி னும்பர் ஒழிந்தெயி றூனஞ் செய்யுங் கோளென மற்றுஞ் சொன்னான்.' இது (நச்சு) மருத்துவம் பற்றியது. இதற்கடுத்த இரு செய்யுட்களும்
1286
ரு
இதுவே.
ce
ஒள்ளிலைச் சூலந் தெண்ணீ ருலாமுகிற் கிழிக்கு மாட'
2527
சூல நெற்றிய கோபுரத் தோற்றமும்”
3003
"பன்மலர்க் கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரிக்
கன்னிமூ தெயில்”
இவை சிற்பம் பற்றியன. சூலம்-இடி தாங்கி.
1250