உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

மொழிநூற் கட்டுரைகள்

கோ (ஆன்) என்னும் தென்சொல் மேலையாரிய மொழிகளிலும் சென்று வழங்குவதும், pecunia என்றும் இலத்தீன் சொல் மாடு என்றும் தென்சொல் லொத்துச் செல்வத்தை யுணர்த்துவதும், பேராசிரியர் பி.டி.சீநிவாச ஐயங்காரும், பண்டாரகர் இராமச்சந்திர தீட்சிதரும் கூறியுள்ளவாறு, குமரிக்கண்டத் தமிழருள் ஒரு கூட்டத்தாரே மேலை நாடு சென்று ஆரியராக மாறி யுள்ளமையை உணர்த்தும்.

இதுகாறுங் கூறியவற்றால், பசு என்பது வடசொல்லேயென்றும், அதைத்தென் சொல்லென்பதால் பொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகிப் பலதூய தென் சொல்லும் வடசொல்லாகத் தோன்று மென்றும், ஆதலால் அதனால் தீமையே யன்றி நன்மையில்லை யென்றும், பசும்புல்லைத்தின்பது பசுவென்பது சற்றும் பொருந்தாதென்றும், அறிந்துகொள்க.

"

இனி, பாசம் என்னும் வடசொல், பசுமை, பசை, பாசி என்னும் தென் சொற்களுள் ஒன்றன் திரிபெனக் கொள்ள இடமிருப்பினும், இந்தியத் தோலாற் செய்யப்படும் பாதக்கூடு (boot) இந்தியக் காலணியாகாமை போன்றே, தென் சொல்லினின்று திரிந்து ஒரு சிறப்புப் பொருளை யுணர்த்தும் வடமொழித் திரிசொல்லும் தென் சொல்லாகாமை கண்டுகொள்க.

4

தமிழ்ப்பாவை 4 ஆண்டுச் சிறப்புமலர் (மதுரை எழுத்தாளர் மன்றம்)