தனிச்சொற்கள்
99
பேரா. பரோ (Burrow) இதை அறியாது, தம் 'சமற்கிருத மொழி' (The Sanskrit Language) என்னும் நூலின் இறுதியதிகாரத்தில்,
'Kadalē" `banana' cf. Sakai telui, kelui, Nicobor talui. Khmer tut taloi, Palaong klog 'plantain' ; Savara kin - tēn · banana' என்று, கதலி யென்னும் சொல்லிற்கு மூலங்காட்டியுள்ளமை சிறிதேனும் பொருந்துமா வென்று அறிஞர் கண்டுகொள்க.
-
=
குள் குட்டு - குட்டன் = 1. சிறுவன், சிறுபிள்ளை. “என்சிறுக் குட்டன்” (திவ். பெரியாழ். 1:4:2), 'குயிலெனப் பேசுமென் குட்டனெங் குற்றது” (திருக்கோ. 224). 2. ஆட்டுக்குட்டி (திவா.).
ம. குட்டன். க. குட்ட (gudda).
குட்டு - குட்டி குட்டி = 1. மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல் ஆகியவற்றின் இளமைப் பெயர் (தொல். மரபு. 6-8). 2. விலங்கின் இளமைப் பொதுப் பெயர். 3. சிறு பெண். அது நல்ல குட்டி. 4. கடைசிப் பிள்ளை. இவன் என் கடைக்குட்டி. 5. சிறுமைப் பெயர். எ - டு: குட்டித் தொல்காப்பியம்.
ம. குட்டி. க. குட்டி (guddi). த. பிள்ளைகுட்டி
=
பிள்ளைகள்.
குட்டி - E. kid, a young goat. kid, kiddy (sl), child; ME. kid, kidde. Dan. kid, Swed. kid, Norw. kid, Icel. kid, ON. kith, OHG. kizzi. chizzi, MHG., G. kitze.
kid - fox, a young fox.
குள்-குய் -
குள்- குய் - குய்ஞ்சு - குஞ்சு = 1. பறவைக் குஞ்சு. 2. அணில் எலி முதலியவற்றின் குட்டி.
L
ம. குஞ்ஞு. க. கூசு = குழவி.
=
குஞ்சு- குஞ்சி = 1. பறவைக்குஞ்சு. 2. சிறியது.
எ-டு: குஞ்சியப்பன், குஞ்சிப்பெட்டி.
குல் - குர் - குரு. குருத்தல் = தோன்றுதல். “அதினின்று மொரு புருடன் குருத்தான்” (விநாயகபு. 72: 4).
குரு = 1. குழந்தை. 2. தோன்றுங் கொப்புளம், வேர்க்குரு. “வெப்பு நோயுங் குருவுந் தொடா” (சிலப். உரைபெறு கட்டுரை). 3. மயிர் சிலிர்ப்பு. 4. கொட்டை, பலாக்குரு. 5. புல்லியது. குருநகை = புன்சிரிப்பு. LG. gor, child.
-
குரு குருத்து = 1. ஓலைக் கொழுந்து, பனங்குருத்து. 2. கொழுந்தாடை, கரும்பு நுனி. குருத்திற் கரும்புதின் றற்றே” (நாலடி. 211) 3. இளமை. 4. மெல்லிய உட்புறம், காதுகுருத்து. 5. மெல்லிய உட்பொருள். மருப்பு (தந்தம்) மூளை யிவற்றின் குருத்து. ஆளி