தனிச்சொற்கள்
111
இனிய
அக.). 16. கழி (பிங்.). 17. மேலிடம் (W.). 18. இடம் (திருக்கோ. 356, உரை). 19. வடிவம். 20. காரணம். 21. ஏழாம் வேற்றுமை யுருபு செய்திநின் னார்வலர் முகத்தே” (புறம். 12).
முகம் - வ. முக (mukha). 2. 45
முகஞ்செய்தல் = (செ.கு.வி.)1. தோன்றுதல். “முகஞ்செய் காரிகை” (பெருங். உஞ்சைக். 35 : 49) 2. முன்னாதல். “தோற்றினான் முகஞ்செய் கோலம்” (சீவக. 6275.) - (செ.குன்றா வி.) நோக்குதல் “முன்னினான் வடதிசை முகஞ்செய்து’” ( சீவக. 1408).
முகம் என்பது, நிலைச்சொல்லாகவும் வருஞ்சொல்லாகவும் எத்துணையோ கூட்டுச் சொற்களில் தொன்றுதொட்டு வழங்கி வருகின்றது.
எ-டு : முகவுரை, முகக்களை, முகச்சாடை, முகதலை, முக நட்பு, முகப்பழக்கம், முகமண்டபம், முகவாய்க் கட்டை.
அறிமுகம், கழிமுகம், சுரிமுகம், திருமுகம்,
துறைமுகம்,
முனைமுகம்.
நூன்முகம்,
போர்முகம், மறைமுகம்,
முகம் என்னுஞ் சொல்லிற்குத் தோற்றம் அல்லது முன் பக்கம் என்பதே அடிப்படைப் பொருள். வடமொழியாளர் அதற்கு வாய் என்பதை அடிப்படைப் பொருளாகக் கொண்டு, அதற்கேற்பப் பொருந்தாப் பொய்த்தலாக ஒரு கரணியங் காட்டுவர்.
முகம் - முகடு = 1. உச்சி. “முகடுதுமித் தடுக்கிய பழம்பல்லுணவின் '” (பெரும்பாண். 246). 2. உயர்வு. “முனிமை முகடாய மூவா முதல்வன்” (சீவக. 1609). 3. தலை. “முகடூர் மயிர்கடிந்த செய்கை யாரும் ” (தேவா. 936 : 10). 4. முதுகுபுறம். "சொல்லத் தகுமுகட் டொட்டகம்” (கனா.15) . 5. வீட்டின் மேற்கூரை (W.). 6. முகட்டுவளை. “இகழ்ந்தார் முகட்டுவழி கட்டிற்பாடு” (ஆசாரக். 23). 7. வான் முகடு. “வானெடு முகட்டை யுற்றனன்” (கம்பரா. மருத்து. 30).
௧., தெ. மொகடு (g).
முகடு - முகடி = முகட்டில் தங்குவதாகக் கருதப்படும் மூதேவி. “மடியுளாள் மாமுகடி யென்ப” (குறள். 617).
முகம் = முகத்தில் முன் நீண்டுள்ள மூக்கு.
முகம் - முக . முகத்தல் = மூக்கால் முகர்தல்.