உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

113

முகவாய் - மோவாய். முகவாய்க் கட்டை -மோவாய்க் கட்டை. முகவன் = ஒரு குழும்பின் படிநிகராளி (Agent).

முகவியர் = இன்முகமாயுள்ளோர். “முன்பட்ட தொழிந்து நுங்கண் முகவியர் முனிவு தீர்ந்தார்” (சீவக. 2045).

முகவு = மாளிகை முகப்பு.

முகவெட்டி = ஓர்அலுவலன்(S.I.I. iii, 118).

முகம் முகன் - முகனை = 1. முன்புறம். 2. தொடக்கம்.3. முன்னெழுத்து. 4. முன்சினம். ஏன் இவ்வளவு முகனை உனக்கு? (இ. வ.). 5. அதே நேரம் (தக்ஷணம்). நான் வந்த முகனையிலேயே அவன் போய்விட்டான் (W.). 6. தலைமை. அவன் முகனை பண்ணுகிறான்(W.).

முகனை - மோனை = மோனைத் தொடை. “மோனை யெதுகை முரணேயியைபென” (தொல். செய்.87). 2. முதன்மை. "மோனை மங்கலத் தியற்றுவ” (உபதேசகா. சிவபுண். 63).

முள் - மொள் - மொழு -மொகு - மொக்கு = 1. பூமொட்டு. 2. ஆடைகளில் மொக்குப்போற் செய்யப்படும் வேலைப்பாடு. நிலத்திலிடும் பூக்கோலம். 4. குத்து விளக்கின் தகழி (W.).

6

3.

மொக்கு - மொக்குள் = 1. மலரும் பருவத் தரும்பு. “முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போல்” (குறள். 1274). 2. நீர்க்குமிழி. 'படுமழை மொக்குளின்” (நாலடி. 27). க. முகுள் (g).

மொக்குள் - மொக்குளி. மொக்குளித்தல் = 1. குமிழியுண்டாதல்(W.). 2. திரளுதல் (யாழ். அக.). க. முக்குளிசு.

மொக்குளிப்பான் = கொப்புளிப்பான், அம்மைக் கொப்புளம். மொக்கை = முகம்.

-

-

முள் மள் மள்ளன் (திருமுருகு. 262).

மள்

-

=

இளைஞன். 'பொருவிறல் மள்ள”

மழ = 1. இளமை. “மழவுங் குழவும் இளமைப் பொருள” (தொல்.உரி. 14). 2. குழந்தை "அழுமழப் போலும்” (திருக்கோ.

147)

-

மழ மழவு = 1. இளமை. 2. குழந்தை.

-

=

மழவு மழவன் 1. இளைஞன். மணவொலி” (கம்பரா. நாட்டுப். 50).

“மழவர்த மனையன