4
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)
சமற்கிருதத்தின் தனியுடைமை யல்லாத நூற்றுக்கணக்கான அடிப்படைச் சொற்கள், அதற்கும் தமிழுக்கும் பொதுவாக வுள்ளன. அவற்றுட் பெரும்பாலன தமிழ் என்பது, அறிவியற் சொல்லியலால் இன்று வெட்டவெளி யாகின்றது. வடமொழியாளர் குறிக்கோட் சொல்லியல் (Tendentious Etymology) கொண்டே, அவற்றை யெல்லாம் வடசொல்லென்றே இதுவரை ஏமாற்றி வந்திருக் கின்றனர்.
ஆரிய மொழிச் சுட்டுகட்கெல்லாம் தமிழ்ச் சுட்டுகளே அடிப்படையாதலால், வேறு பொருட் சொற்களை வடமொழியாளர் உடனடியாய் ஒப்புக்கொள்ளாவிடினும், சுட்டுப்பொருட் சொற்களைத் தமிழ்ச்சொல்லென்று ஒப்புக்கொள்ளாம லிருக்க முடியாது.
தமிழ்ச் சுட்டுகள், மூவேறிடத்தைத் தப்பாது சுட்டும் மூவேறு தனியெழுத்தொலிகள் அல்லது ஓரெழுத்துச் சொற்கள்; ஆரியச் சுட்டுகளோ பெரும்பாலும் இடமாறிக் குறிப்பனவும், ஈரிடத்திற்குப் பொதுவானவும், அடி திரிந்தனவுமான பலவெழுத்துச் சொற்கள். இஃதொன்றே தமிழ்ச்சுட்டின் முன்மை காட்டச் சாலும்.
ஆரியமொழிகளிற் சென்று வழங்கும் தமிழ்ச் சுட்டுச் சொற்கள் பலவிருப்பினும், இங்கு உம்பர் என்னுஞ் சொல்லே எடுத்துக் கொள்ளப்பட்டது.
"எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை முதலீ றிடைநிலை போலி” யென்னும் பத்து அகத்திலக்கணத்திற்கும், கிளவி புணர்ச்சி யென்னும் இரு புறத்திலக்கணத்திற்கும், இடமானதும்; உயிர், மெய், உயிர்மெய் என்னும் பாகுபாடும் உயிர்மெய்த் தனிவடிவும் உடையதும், முதன்முதல் மாந்தன் வாயில் தோன்றிய ஆ ஈ ஊ (அ இ உ) என்னும் முச்சுட்டுகளையே முதற்கண் கொண்டதுமான நெடுங்கணக்கு, உலகில் முதன்முதல் தோன்றியது தமிழிலேயே. தமிழ் நெடுங்கணக்கின் வளர்ச்சியே வடமொழி வண்ணமாலை. இதைப் பிறழ வுணர்ந்தார் கால்டுவெலார்.
ஆகும்.
வ்
ஆ ஆ ஈ ஊ என்னும் மூன்றும், முறையே, சேய்மைச் சுட்டும் அண்மைச்சுட்டும் இவ் விரண்டிற்கும் இடைப்பட்ட முன்மைச் சுட்டும் இவற்றுள் ஏதேனும் ஒன்றை ஒலிக்கும் நிலையில், ஏனையிரண்டையும் ஒலிக்க வியலாது. ஆதலால், இவை விரல்போற் சுட்டிகள் (pointers) ஆயின. இது தமிழின் அல்லது திரவிடத்தின் சிறப்பியல்பு.