தனிச்சொற்கள்
139
சென்னைப் ப.க. தமிழ் அகரமுதலி தொகுத்தோர் துணிச்சலுடன் காட்டியிருப்பதும், இன்றும் தமிழ்ப் பேராசிரியரும் அதை உணரா திருப்பதும், உணர்த்தினும் சிறிதுஞ் செவிக் கொளாதிருப்பதும், இற்றைத் தமிழன் தன் உயர்திணைத் தன்மையை அல்லது நெஞ்சுரத்தை முற்றும் இழந்துவிட்டானோ என்று ஐயுற்று வருந்தச் செய்கின்றன.
பள்ளிக்குறிப்பு, பள்ளிகொண்டான்,
பள்ளிகொள்ளுதல், பள்ளிமண்டபம், பள்ளிமாடம், பள்ளியந்துலா, பள்ளியம்பலம், பள்ளியயர்தல், பள்ளியறை, பள்ளியெழுச்சி என்பன படுக்கை அல்லது தூக்கம்பற்றிய வழக்குச் சொற்கள்.
பள்ளிபடுத்தல், பள்ளிபடை என்பன அரசரையும் முனி வரையும் அடக்கஞ் செய்தல் பற்றிய வழக்குச் சொற்கள். அடக்கஞ் செய்தல் நிலையாகப் படுக்கைப் படுத்துதல் போன்றது.
பள்ளிகம்பு வைத்தல் என்பது, வரி செலுத்தாதவன் வீட்டின் முன் கம்பு நட்டு மறியல் செய்யும் நாஞ்சில் நாட்டு வழக்குப்பற்றிய சொல். பள்ளியோடம் என்பது சிறு வீடு போன்ற அமைப்புள்ள மரக்கலம்.
பள்ளிக்கட்டில், பள்ளிக்கட்டு, பள்ளித்தேவாரம், பள்ளிப் பீடம், பள்ளிவேட்டை என்பன, அரண்மனை அல்லது அரசன் தொடர்பான வழக்குச் சொற்கள்.
பள்ளிச்சந்தம் என்பது சமண புத்தக்கோவில் மானியமும், பள்ளிவாசல் என்பது மகமதியர் கோவிலும் பற்றிய வழக்குச் சொற்கள்.
பள்ளிக்கணக்கன், பள்ளிக்கணக்கு, பள்ளிக்கு வைத்தல், பள்ளிக்கூடம், பள்ளிக்கூடத்தான், பள்ளித்தோழமை, பள்ளிப் பிள்ளை, அரைப்பள்ளி, உச்சிப்பள்ளி என்பன, திண்ணைப் பள்ளிக் கூடம் அல்லது துவக்கக் கல்விச்சாலை பற்றிய வழக்குச் சொற்கள்.
இனி, வேறு சில வழக்குச் சொற்களும் உள.
இத்தகைய வழக்குச் சொற்கள் வடமொழியில் இல்லை. பள் -படு -படுக்கை, படை.
ஒ. நோ : Goth. badi, OE. bed, OS. bedi (d), E. bed.
படு
-
பாடு
-
பாடி,
பாடை. படு
-44.
படிதல்.
ஒ.நோ : OE., OS. bidan, Goth. beidan, E. bide.