158
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)
‘This root bar, however, is not an English root. It existed long before English existed, and we find it again in Latin, Greek, Celtic, Slavonic, Zend, and Sanskrit, that is, in all the languages which from what is called the Aryan family of speech. As this root bar exists in Latin as fer, in Greek as pher, in Celtic as ber, in Slavonic as ber, in Zend as bar, and in Sanskrit as bhar, it is clear that it must have existed before these languages separated, and that, as you may imagine, must have been a very, very long time ago.
-
Three Lectures on the Science of Language, pp. 20-3 புல் - பொல் - பொர் - பொரு - பொறு. பொருதல் = பொருந்துதல், பொருந்தித் தாங்குதல்.
ஒ.நோ: முட்டுதல் = பொருந்துதல், பொருந்தித் தாங்குதல். முட்டுக் கொடுத்தல் என்னும் வழக்கை நோக்குக.
பொரு - பொருப்பு = வான் முகட்டைத்தாங்குவதாகக் கருதப்பட்ட மலை. Atlas என்னும் இலிபிய (Libeya) நாட்டுமலை வான்முகட்டைத் தாங்குவதாக, பழங்காலக் கிரேக்கரால் கருதப்பட்டமையை நோக்குக.
இதினின்று, உலக முதன்மொழியும் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான தமிழினின்றே, சுமத்தலைக் குறிக்கும் (மேற்காட்டிய) ஆரியச் சொற்களெல்லாம் திரிந்துள்ளனவென்று, தெற்றெனத் தெரிந்துகொள்க.