162
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) 'இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.
2. பிரம்படி யுண்ட தோலறுதல் (W.).
(குறள். 1068)
பக்கடுத்தல் = நொறுங்குதல். “பக்கடுத்தபின் பாடியுய்ந்தானன்றே” (தேவா. 785 : 11)
பக்கு - பக்கம் = 1. பகுதி. 2. தொழிற்கூறு. “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்’” (தொல்.புறத். 20). 3. சாரி (side). “பக்க நோக்கி நிற்கும்” (திவ். திருவாய் 5: 5: 5). 4. விலாப் புறம். 5. சிறகு. “இசைபடு பக்க மிருபாலுங் கோலி”(பரிபா. 21:31). 6. திசை. தென்பக்கம் (உ.வ.). 7. இடம். ஊழையு முப்பக்கங் காண்பர்” (குறள் .620). 8. தாட்புறம். அட்டையின் உட்பக்கம் (உ.வ). மறைமலையடிகள் வரலாறு, 50ஆம் பக்கம் (உ.வ.). 9. நூல். “வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு" (தொல். புறத். 41.). 10. அருகு. “பக்கஞ் சார்ந்தவர் பான்மைய னாயினன்” (மணிமே. 16 : 16). 11. சார்பு. அவர் தொடுத்த வழக்கு எதிரிபக்கம் தீர்ப்பாயிற்று, இரண்டாம் உலகப்போரில் சப்பான் செருமானியர் பக்கஞ் சேர்ந்திருந்தது. 12. உளச்சார்பு, நட்பு, அன்பு. 13. சுற்றம். “பக்கஞ் சூழ வடமீன் காட்டி” (கல்லா: 18). 14. படை. "தாவரும் பக்கம் எண்ணிரு கோடியின் தலைவன்” (கம்பரா. இலங்கைக் கேள்வி . 40). 15. திங்களாற் கணிக்கப்படும் காலப்பகுதி. வெண்பக்கம் (வளர்பிறைக் காலம்), கரும்பக்கம் (தேய்பிறைக் காலம்). 16. திங்களின் கலைநிலை. எட்டாம் பக்கம்.
17. ஏரணத்தில் உண்மை காண அல்லது மெய்ப்பிக்க
எடுத்துக்கொள்ளப்படும் மேற்கோள். 18. பெயரெச்சத்தை யடுத்து ‘இடத்து’என்னும் பொருளில் வரும் வினையெச்ச வீறு. எ-டு. வரும்பக்கம் = வருமிடத்து.
அக்கம் பக்கம், பக்கக்கன்று, பக்கக்குடுமி, பக்கச்சுவர், பக்கச்சொல், பக்கச் சூலை, பக்கத்துணை, பக்கத்து வீடு, பக்கப் பலகை, பக்கப் பாட்டு, பக்கப்பாளை, பக்கமேளம், பக்கவடம், பக்கவழி, பக்கவளை, பக்கவாட்டு, பக்கவெட்டு, பக்கவேர் முதலிய கூட்டுச் சொற்கள் தொன்றுதொட்டு உலக வழக்கில் வழங்கி வருகின்றன.
பக்கம் - பக்கர் = இனத்தார்.
பக்கம் - பக்கல் = 1. பக்கம் “என்பக்க லுண்டாகில்” (பெரியபு, இயற்பகை. 7.) 2. இனம் (W.)
பக்கு - பக்கறை = 1.பை, 2. துணியுறை.
பக்கு - பங்கு = 1. உடற்பாகம். “பங்குலவு கோதையுந் தானும்” (திருவாச. 16 : 9). 2. பாதி (சூடா.) 3. பாகப் பகுதி. "பங்கிற்கு மூன்று பழந்தர வேண்டும் பனந் துண்டமே” (தனிப்பா.). 4. பக்கம். என்