8
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)
Super என்னும்இலத்தீன முன்னொட்டு பிரெஞ்சிலும் அதன் வழியாக ஆங்கிலத்திலும் sur என்று தொக்கும் வழங்கும்.
எ - டு : surplus, surround, surcharge, surveillance.
Sur என்பது sir என்றும் திரியும்.
எ - டு : surloin - sirloin = supperloin.
-
Sur என்பது su என்றும் குறுகும். எ-டு : su(r)sum, upward.
Super என்னும் இலத்தீனச் சொல் கிரேக்கத்தில் huper என்று திரிந்துள்ளது. சகரமுதற் சொற்கள் கிரேக்கத்தில் ஹகர முதலாகத் திரிதல் இயல்பே.
எ-டு:
இலத்தீனம்
sex
septem
semi
similis
somnus
கிரேக்கம்
ஆங்கிலம்
hex
six
hepta
seven
hemi
same (Goth.)
homos
hupnos
sama (ON.) (slup)
ஆங்கிலத்தில், huper என்னும் கிரேக்கச் சொல்hyper என்று திரியும். எ-டு hyperbole, hypereritic, hypergamy, hypermetric, hypermetropia hyperphysical, hypertension, hypertrophy. உம்பர் என்னும் சொல், இலத்தீனத்திற்கும் அப்பாற்பட்ட செருமானியக் குடும்ப மொழிகளில் கிரேக்கத்தினும் மிகத் திரிந்திருப்பினும், சகர மெய்ம்முதல் கொள்ளாது தமிழ்ச்சொல்லை ஒருபுடையொத்து uber, up என்று இருவேறு வடிவிலும் அவற்றின் மேலுந் திரிந்தும் வழங்குவது, வரலாற்றுத் தொடர்பில் மிகக் கவனிக்கத்தக்கது.
Uber
OHG. uber (adv.), ubiri (prep.), MHG. uber, G. uber, ober, Goth. ufar (prep. & adv.), OS. obar, OMG. obar, MG. ober, OFris. over, MDu., MLG., Du., LG. over, D.over, OE. ofer, Sw. ofver, ON, yfer.
உம்
உகரத்திற்கு ஒகர ஓகாரமும், பகரத்திற்கு வகரமும், வகரத்திற்கு ‘f’ இனவெழுத்துகளாதலால், மேற்குறித்த சொல்லெல்லாம்
ஒன்றோடொன்று தொடர்புடையனவே.
கூட்டு.
Above என்னும், ஆங்கிலச் சொல் a + be + ufan என்னும் முச்சொற்