உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




190

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) சுண்ணக்கல் = சுக்கான்கல் (யாழ். அக.).

சுண்ணம் சுண்ணகம்

நறும்பொடி.

=

விழா நாள்களில் மக்கள்மேல் தூவும்

சுள்- சுண்டு. சுண்டுதல் = (செ.கு.வி.) 1. நீர் வற்றுதல் 2. வாடுதல், சுருங்குதல். அச் செய்தி கேட்டவுடன் அவன் முகஞ் சுண்டிப் போயிற்று (உ.வ.)- (செ. குன்றா வி.) நீர் வற்றக் காய்ச்சுதல் அல்லது அவித்தல். இன்றைக்குக் கடலை சுண்டினார்கள்(உ.வ.).

சுண்டு– சுண்டல் = 1. நீர் முற்றும் வற்ற அவித்த கடலைப் பயறு. 2. சுண்டற்கறி.

சுண்டு

சுண்டான்

சிறு

பிள்ளைகள் விளையாட்டாகக்

கொளுத்தும் கொள்ளிக்குச்சு.

சுண்டு- சுண்டி சுண்டி = 1. சுக்கு (காய்ந்த இஞ்சி). 2. தொட்டாற் சுருங்கி, தொட்டாற் சிணுங்கி, தொட்டால் வாடி என்னும் பூண்டு.

சுண்டி (சுக்கு) – வ. சுண்டி (th). இதுவடமொழியிற் ‘சுண்ட்டி’ என வலித்தொலிக்கும்.

சுண்டி - சுண்டில் = தொட்டாற்சுருங்கி. வாடினது சுருங்கும். சுடுவல் = வெதும்பும் அரத்தம் (திவா.).

சுள்- சுடு

_

சுடுவல்- சுடுவன் = வெதும்பும் அரத்தம் (பிங்.).

சுடுவான் = மரக்கலச் சமையலறை.

சுடு சுடல்- சுடலை = சுடுகாடு.

சுடு

சுடர்- சுடரோன் (சுடரவன்) = கதிரவன்.

சுடு

சூடு.

சுல்

சுர்

சுரீர் எனல்

1. நெருப்புச் சுடும் குறிப்பு.

2. தழலிற்படும் நீர் சுண்டும் குறிப்பு.

சூர் - சுரம் = 1. காய்ச்சல். 2. சுடும் பாலைநிலம். "சுரமென மொழியினும்” (தொல். பொருள். 216).

சுரம் (காய்ச்சல்)- வ. ஜ்வர.

சுர் சூர் = 1. நெருப்பு. 2. கதிரவன். "சூர்புக வரியது... .... தொன்மதில்” (கம்பரா. கவந்த. 21).

சூர்– சூரன் = 1. நெருப்பு (பிங்.). 2. கதிரவன் (பிங்.). “காதற் சூரனை யனைய சூரா” (பாரத. பதினேழாம். 49).

சூரன்– வ. ஸூர (sūra) – ஸூர்ய (sūrya)