உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

19

3. உருளை

உல் - உலம் = 1. உருட்சி. 2. திரட்சி. “உலங்கொள் சங்கத் தார்கலி” (தேவா. 112 : 8). 3. திரண்ட கல். 'உலஞ்செய்த வைரக் குன்ற

மோரிரண் டனைய தோளான்” (சீவக. 2915).

உலம் வருதல் = 1. சுழலுதல். 2. நெஞ்சு உழலுதல். “உயிர்க்கு முசாஅ முலம் வரும் ” (கலித். 145 : 4).

உலம் வருதல் - உலமருதல் = மனஞ் சுழலுதல், கலங்கி வருந்துதல், துன்புறுதல். “புலம்பியா முலமர” (கலித். 83: 2).

உலம்வரல்- உலமரல் = துன்பம் (சூடா.).

உலமரல்-அலமரல் = சுழற்சி. “அலமரல் தெருமரல் ஆயிரண்டுஞ் சுழற்சி” (தொல். உரி. 13).

-

உலம் - அலம் = 1. சுழற்சி. 2. துன்பம். “அலமகன் முத்தியுண்டாம்” (சூத. எக்கிய. பூ. 2:8).

உல்

உல

உலப்பு

_

அலப்பு

= மனக்கலக்கம். "அலப்பா யாகாசத்தை நோக்கி” (திவ். திருவாய். 5:8:4).

உல- உ உலக்கை = 1. உருண்டு நீண்ட உரற்குற்றுக் கருவி. “மிளகெறி யுலக்கையின்” (பதிற்றுப். 41). 2. உலக்கை போன்ற போர்ப் படைக்கலம். “உலக்கை சூலம் வேல்” (கந்தபு. சதமுகன். 15). 4. உலக்கை வடிவான ஓண நாண்மீன் (பிங்.). 5. வெருகன்கிழங்கு (தைலவ. தைல. 84).

6

ம. உலக்க, க. ஒலக்கெ.

=

உலத்தல் = சுற்றுதல். உல- உலவு. உலவுதல் = அலைதல், திரிதல். 'ஒருங்குதிரை யுலவுசடை” (திருவாச. 38 : 1). 2. வீசுதல், பரத்தல்.

66

உலவு-உலவை = 1. காற்று (திவா.). 2. ஊதை நோய் (வாதரோகம்).

“வழுத்துலவைக் குலமுழுதும்” (தைலவ. தைல. 88).

உலவையான் = காற்றுத்தேவன் (கந்தபு. அரசு. 7).