இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தனிச்சொற்கள்
39
வேதமொழி மேலையாரியத்தினின்று ருதிர (அரத்தம்) என்னும் சொல்லையும், தமிழினின்று நேரடியாக ரக்த என்னுஞ் சொல்லையும் பெற்றுள்ளது. இவை இரட்டையன்கள் (Doublets).
பிற்சேர்க்கை
அள் - அடு. ஒ. நோ : சுள்- சுடு, விள்- விடு.
.
அடுதல் = 1. சுடுதல். 2. காய்ச்சுதல். 3. உருக்குதல். 4. சமைத்தல். 5. கொல்லுதல். 6. அழித்தல். 7. வருந்துதல். 8. வெல்லுதல். 9. போர் செய்தல். ம.அடுக, க. அடு.
அடு- அடுப்பு = நெருப்பு எரிக்கும் முக்கல் அல்லது சுடுமண்கலம். அடு- அடுதல் - அடுசல் - அடுசில்- அடிசில் = சமைத்த உணவு.
சுடு
=
சுடலை = 1. சுடுதல். 2. சமைத்தல். 3. கொல்லுதல்.
4. அழித்தல். 5. போர் செய்தல்.
அடு – அடல் – அடலை
_
2.ச
= 1. எரித்த சாம்பல். 2. நீற்றின நீறு,
சுண்ணம். 3. துன்பம். 4. போர்.
அடுகளம் - அடுக்களை = மடைப்பள்ளி. ம. அடுக்கள.