உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

கள்– கண்டு = முள், கண்டங்கத்தரி.

கண்டு- கண்டம் கண்டம் = முட்கத்தரி. கள்- கடு = முள்.

_

கடி = கூர்மை (திவா.).

கடு - கடி

41

கண் எல்லாப் பொருள்களொடும் பார்வையாற் கலப்பத னாலும், கருமையாயிருப்பதனாலும், உடம்பிற்கு விளக்காயிருப்பத னாலும், இரு கடையும் கூர்மையாயிருப்பதனாலும், மேற்கூறிய நாற்பொருளும் அதன் பெயருக்குப் பொருந்துமேனும், ஒருவர் பார்த்தமட்டில் தெளிவாகப் புலனாவது கண்ணின் கருவிழியே யாதலாலும், சில சிற்றுயிர்கட்கும் பறவைகட்கும் கருவிழியே யன்றி வெள்விழியின்மையாலும், கருமைக் கருத்தே கண் என்னுஞ் சொல்லின் பொருட்கரணியமாகும். பெண்களின் கண்ணிற் குவமையாகக் கருங்குவளை மலரைச்சிறப்பாகக் குறித்தலையும் நோக்குக.

கள் - கண் = கருமணி கொண்ட பார்வை யுறுப்பு.

ஒ . நோ : உள்- உண், நள்- நண், பெள்- பெண்.

கண் = 1. விழி. “கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை” (தொல். எழுத்து. 7). 2. கண்ணோட்டம். “கண்ணின்று பெயர்ப்பினும்” (தொல். பொருள். 130). 3. பீலிக்கண். ஆயிரங் கண்ணுடையாய்க்கு” (கம்பரா. பம்பை. 27). 4. தேங்காய் பனங்காய்களின்கண். 5. முலைக்கண். 6. புண்ணின் கண். 7. துளை. கால்வாய்த் தலையின் கண்கள் (பாரத. முதற். 72). சல்லடைக்கண், வலைக்கண். 8. தோலிசைக் கருவிகளின் அடிக்கும் பக்கம். “கண்மகிழ்ந்து துடி விம்ம” (பு. வெ. 2: 8, கொளு). 9. நல்லறிவு (ஞானம்). ‘கள்ளொற்றிக் கண்சாய் பவர்” (குறள். 927). 10. உணர்த்துவது. “சொன்ன சிவன் கண்ணா” (சி. போ. 5 : 2 : 1). 11. முன்பு. “கண்ணின் றிரப்பவர்” (குறள். 1056).

ம. கண், கண்ணு = MN, பீலிக்கண், முலைக்கண், அரும்பு.

க. கண் = விழி, சிறுதுளை, திறப்பு.

து. கண்ணு = MN, பீலிக்கண், முலைக்கண், பிளவு, கிழிவு.

தெ. கனு, கன்னு = விழி, பீலிக்கண், சிறுதுளை, வலைக்கண், திறப்பு. துடவம் : கொண் = விழி, கண்ணி (loop).

கோத்தம் : கண் = விழி.