உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

43

இயற். 3 : 1). 3. கண்டறிதல். “காணாதாற் காட்டுவான் தான்காணான்” 3 (குறள். 849). 4. அறிதல். "யாவருங் கண்ட நெறி” (ஆசாரக். 17). 5. அறிந்தியற்றுதல். “முனைவன் கண்டது முதனூ லாகும்” (தொல். பொருள். 649). 6. பொறியாலறிதல். "அவன் பேச்சைக் கண்டு” (திருவாலவா. 16 : 28). 7. பட்டறிவா லறிதல். 8. ஆராய்தல். “அறம்பொருள் கண்டார்க ணில்” (குறள். 141). 9. மதித்தல். “தானெனக் கண்டும்”(கல்லா. 51 : 7). 10. பெறுதல். “முற்றுமிடங் கண்டபின்”(குறள். 491). 11. ஒத்திருத்தல். “மழை காணு மணிநிறத்தோய்” (கம்பரா. குகப். 26).

(செ. கு. வி.) 1. நிகராதல். என்ன இருந்தாலும் அவருக்குக் காணுமா? 2. பொருந்துதல். “மற்காணுந் திரடிண்டோள்” (கம்பரா. குகப். 26). 3. கண்ணிற்குத் தெரிதல். “காண்கின்ற நிலமெல்லாம் யானே யென்னும்’ (திவ். திருவாய். 5 : 6 : 3). 4. சேர்தல். இவ்வாண்டு சாகுபடி எவ்வளவு காணும்?5. போதியதாதல். இவ் வரிசி எத்தனை நாளைக்குக் காணும்?

6

காண் = (பெ.) 1. காட்சி. “காண்பிறந் தமைந்த காதல்” (கம்பரா. திருவடி தொழு. 80). 2. அழகு. “காண்டக முந்துநீ கண்டுழி முகனமர்ந்து” (திருமுருகு. 250 : 1).

(இடை.) முன்னிலை யுரையசை. "துவ்வாய் காண்” (குறள். 1294). காண்கை அறிவு. “பொய்யா மாக்கள் தொழுதுகாண் கையர்” (முல்லைப். 56).

காட்சி = அறிவு. "மருடீர்ந்த மாசறு காட்சி” (குறள். 199). காண்- காணம்.

கண் காணம் = மேற்பார்வை, அறுவடை மேற்பார்வை, ஒப்படி மேற்பார்வைச் சம்பளம்.

கண்காணி

=

1. மேற்பார்வலன். 2.

ஒப்படியலுவலர்.

3. கூலியாள்களை மேற்பார்ப்பவன். 4. குளம்பி, கொழுந்து (காப்பி தேயிலை)த் தோட்டங்கட்குக் கூலியாள்களைச் சேர்ப்பவன்.

கண்காணியார் = கிறித்தவ சவையை மேற்பார்க்குங் குரவர்.

கண்காணித்தல் = 1. மேற்பார்த்தல். 2. மேற்பார்த்துப் பாதுகாத்தல். கண்காணிப்பு = மேற்பார்வை. கண்காணிப்பாளர் = மேற் பார்க்கும் அதிகாரி. கண்காணிக்கை = கண்காணிப்பு.