தனிச்சொற்கள்
(4) a body of troops resembling a column.
ஒ. நோ : தண்டு = படை. தண்டு
வகுப்பு வடிவம்.
63
தண்டம்
=
படை, படை
E. colonel, highest regimental officer. L. columna - It. colonna - colonello - F. colonel, E. colonel.
-
கீற்று (Skeat), கிளேயின் (Klein) முதலிய ஆங்கிலச் சொல்லியல் அதிகாரிகளெல்லாம் column என்னுஞ் சொல்லை உயரத்தையும் மலையையுங் குறிக்கும் columen என்னும் இலத்தீன் சொல்லினின்றும், எழுதல் அல்லது உயர்தல் என்னும் கருத்தை யுணர்த்தக்கூடிய qel என்னும் கருதுகோள் வேர்ச்சொல்லினின்றும், திரிக்கின்றனர். அதுவும் பொருத்தமாகத் தோன்றுகின்றது. ஆயின், தூண்கள் இயற்கையாகத் தோன்றியவை யல்ல. தாங்குதல் என்னும் அடிநிலைக் கருத்தும், நீண்டிருத்தல் என்னும் வழிநிலைக் கருத்தும் தூணியல்பிற்கு மிகப் பொருந்தும்.
66
கால் - காலை = (பெ.) 1. நேரம். பொழுது (பிங்.). 2. தக்க சமையம். காலைய தறிந்தனை” (கந்தபு. திருவவ. 14). 3. தடவை "முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர்” (நாலடி. 24). 4. துயிலெழும் அல்லது வேலை தொடங்கும் விடியற் காலம், “காலையி லெழுந்தவுடன் காகத்தைப் பார்த்தல் கூடாது” (பழ.).
“காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குக் செய்த பகை.
66
(குறள். 1225)
5. பள்ளியெழுச்சி முரசம். மேல்வந்தான் காலைபோல்... துயிலோ வெழுப்புக” (கலித். 70). 6. விடிகாலையெழுங் கதிரவன். “காலை யன்ன சீர்சால் வாய்மொழி” (பதிற்றுப் . 21 : 4). 7. பகல் முதற்பத்து நாழிகை, சிறுபொழுது ஆறனுள் ஒன்று. 8. முற்பகல். காலைப்பள்ளி. 9. பகற்காலம் “எல்லியிது காலையிது வென்ப தறிகல்லா” (சீவக. 1877) 10 வாழ்நாள் " நோகோ யானே தேய்கமா காலை” (புறம். 234). 11. வாழ்நாட் காலத்தின் முற்பகுதி.
கு.பெ. எ. (adv.) பொழுதில்." அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல்” (நாலடி. 68)
கால் - காலம் = 1. காலப் பொது. “கால முலக முயிரே யுடம்பே” (தொல். கிளவி. 58). 2. விடியற்காலம். அவர் காலத்தாலே யெழுந்து போய்விட்டார் (ஆம்பூர் உ.வ.), “காலமே தேவனைத் தேடு" (வே. சா.). 3. தக்க சமயம்.
உ