உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

71

குப்பை” (பொருந. 244). 3. திரள். “மன்பெரும் பவழக் குப்பை வாலணி கலஞ்செய் குப்பை” (சீவக. 114) 4. கூட்டம். "கோட்சுறா வினத்தொடு முதலைக் குப்பைகள்” (சீவக. 95). 5. உரக்குவியல். 6. வீட்டிலும் தெருவிலும் கூட்டி வார வேண்டிய கழிவுப் பொருள்கள். 7. மலம் இடக்கரடக்கல்).

ம., தெ. குப்ப, க. குப்பெ.

குப்பை - (குவியல்) - AS. heap, OE. hop, OE.heap, ME. heep, E. heap, Du. hoop, Ice. hopr, Dan. hop Swed. hop, G. haufe, OHG. hufo, Russ. kupa, Lith. kaupas.

கும் - குமி. குமிதல் = குவிதல், திரள்தல்.

ம. குமி, தெ. குமி (g).

குமித்தல் = திரளச் செய்தல்.

குமி - குமிழ் = 1. நீர்க்குமிழி. 2. பாதக்குறட்டின் உருண்டு திரண்ட புடைப்பு அல்லது முளை. 3. எருத்தின் திமில்.

தமிழ் - குமிN = 1. நீர்க்குமிழி. குINவிட் டுமிழ்குருதி” (சீவக. 2239). 2. பாதக்குறட்டின் குமிழ்.

குமிழ்த்தல் = குமிழியிடுதல். குமிழித்தல் = குமிழி கொள்ளுதல்.

கும் - குமர் = 1. திரண்ட 1. திரண்ட இளமை. ளமை. ஒ.நோ: விடைத்தல் = வீறுகொண்டு விறைத்தல். விடை = வலிமையுள்ள இளம்பருவ வுயிரி. 2. கன்னிமை. “குமரிருக்குஞ் சசிபோல்வாள்” (குற்றா. தல. தருமசாமி. 47). 3. அழியாத் தன்மை. “ குமருறப் பிணித்த பைம்பொற் கொடி” (பாரத. இந்திரப். 32.)

குமர் குமரன் = 1. இளைஞன். "இருந்தகுலக் குமரர்தமை யிருகண்ணின் முகத்தழகு பருக நோக்கி” (கம்பரா. மிதிலைக். 157). 2. இளைஞனான முருகன். "குன்றுதோ றாடிய குமரற் போற்றுவாம்” (கந்தபு. கடவுள். 16).

66

-

குமர் குமரி = 1. பூப்படைந்த இளம்பெண், இளைஞை . "குமரிமணஞ் செய்துகொண்டு” (திவ். பெரியாழ். 3: 8: 3), 2. பூப்படைந்து மணவாத பெண்டு. 3. அழியாத் தன்மை, அழிவின்மை. குமரிக் கூட்டிற் கொழும்பல் லுணவு” (சிலப். 10 : 123) 4. என்றுங் கன்னியா யிருப்பவளாகக் கருதப்படும் காளித் தெய்வம். “விழிநுதற் குமரி’ 'சிலப். 11. 214). 5. காளி பெயர் கொண்ட (பழம் பாண்டிநாட்டு) மலைத்தொடர். "குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள” (சிலப். 11: 20). 6. அவள் பெயர் கொண்ட ஆறு. ‘வடவேங்கடந் தென்குமரி” (தொல். பாயி.) 7. குமரிமலையைத்