உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

=

79

6. மும். மும் - மம் - மம்மல் = மயங்கல் - மசங்கல் (அந்தி நேரம்) என்று கொள்ளவும் இடமுண்டு. மம்மல் - மம்மர் மயக்கம். மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகும்” (நாலடி. 14) மயங்குதல் என்னுஞ் சொல்லின் முதற்பொருள் கூடுதல் (கலத்தல்) என்பதே.

உம் என்னும் சொல் கூடுதல் எனனும் வினைப்பொருளில் வழக்கிறந்தது. அப் பொருளுண்மையாலேயே அது கூட்டிணைப்புச் சொல்லாக (copulative conjunction) கொள்ளப்பட்டது. இணைப் பிடைச் சொல்லாக வரும் உம்மைச் சொல்லை எண்ணும்மை யென்பது இலக்கண

மரபு.

“எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை

முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம்என் றப்பா லெட்டே உம்மைச் சொல்லே.'

(தொல். இடை.7)

"எதிர்மறை சிறப்பையம் எச்சமுற் றளவை தெரிநிலை யாக்கமோ டும்மை யெட்டே.’

உம்மை யிடைச்சொல், பெயர்ச்சொற்களையும்

களையும் வினையெச்சங்களையும் இணைக்கும்.

(நன். 425)

எ-டு: அறமும் பொருளும் இன்பமும் வீடும் - பெயர். மழவுங் குழவும் இளமைப் பொருள” - உரி. சொல்லியும் எழுதியும் வருகிறான் - வி.எ.

உரிச்சொற்

உம் - அம் = நீர். “அம்தாழ் சடையார்” (வெங்கைக்கோ. 35.). நீர் தன்னொடும் பிறிதொடும் கலக்குந் தன்மையது.

“செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”

அம் - அம்பு = நீர் . ஒ. நோ : கும் - கும்பு.

அம்பு - வ. அம்பு.

அம்பு - அப்பு = நீர் (பிங்.). ஒ. நோ : கும்பு குப்பு.

அப்பு - வ. அப்.

ஒ.நோ -

அம் - ஆம் = நீர். "ஆமிழி யணிமலை” (கலித். 48).

(குறுந். 118)

அம், ஆம் என்னும் இருவடிவும் வடமொழியி லின்மையை நோக்குக.

அம்பு-அம்பல் = 1. கூடுதல். குவிதல். முகிழ்த்தல். 2. பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை (பேரரும்பு) (இறை.22,உரை). 3. சிலரே யறிந்து புறங்கூறும் மொழி. அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின்”

(தொல். களவு. 48).

66