உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அந்தோ! வெங்காலூர்த் தமிழர் படும்பாடு

97

போன்றே, தமிழகமும், கீழ்நாடுகளுள் தலைசிறந்தமை "தமிழ் கூறும் நல்லுலகம்" என்னும் பனம்பாரனார் கூற்றால் விளங்கும். தமிழ் நாகரி கத்தின் தனிநாயகத் தன்மையே "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் பொன்னெறி மொழியைத் தோற்றுவித்தது. இந் நெறிமொழிப் படியே, தமிழர் வெங்காலூரில் அண்மைக் காலம்வரை அகமகிழ்ந்து வாழ்ந்து வந்தனர். ஆயின், இன்றோ வரலாற்றறிவும் பண்பாட்டியல்பும் இல்லாத சில கன்னடக் கயவரால் அந்நிலைமை கெட்டுள்ளது.

1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலப்பிரிவு ஏற்பட்டதிலிருந்து கடந்த 13 ஆண்டுக்காலமாக, கோவை மாவட்டக் கோபி வட்டத் தாள வாடிக் கூற்றம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்துவருகின்றது. அதன் குடிவாணர்க்கு வேண்டிய தேவைப் பொருள்களும் வாழ்க்கை யேந்துகளும் தரப்பட்டும் ஏற்பாடாகியும் வருகின்றன.

இந்நிலையில், வெங்காலூர்ச் சட்டப்பேரவையைச் சேர்ந்தவாத்தல் நாகராசு என்னும் தான்றோன்றிச் சிறு தலைவர், பெயர் பெறுதற்கும் மறுதேர்தலில் வெற்றியுறுதற்கும் திட்டமிட்டுக் குறும்புத்தனமாக ஊர்க் காவலர் தடையுத்தரவை மீறித் தாளவாடி புகுந்து. அதைக் கன்னட நாட்டொடு சேர்க்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்யுமாறு அங்குள்ள கன்னடியரைத் தூண்டி சட்டப்படி தகைக்கப்பட்டுச் சிறையிலிடப் பட்டார். உடனே அவரைச் சேர்ந்த எதிர்க் கட்சியார் மைசூர் நாட்டுச் சட்டப் பேரவையில் துரும்பைத் தூணாக்கிப் பேரார வாரஞ் செய்தனர். இதைத் தூண்டுதலாகவுந் துணையாகவுங் கொண்டு, வாத்தல் நாகராசு என்பவரைத் தலைவராகக் கொண்ட கிளர்ச்சிக்காரர் ஆயிரவர், வெங்கா லூர்ப் பெருந்தெருக்களூடும் ஆவண (கடைத் தெரு) மறுகு (வீதி) வழி (கடைத்தெரு) யாகவும், தங்கள் தலைவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று கத்திக்கொண்டு சென்று. கன்னடப் பொதுமக்கள் அங்குள்ள களங்கமற்ற தமிழரைத் தாக்குமாறு ஏவாமல் ஏவினர். அதன் விளைவாக, மறுநாளே மதுரையி னின்று சுற்றுலாச் சென்ற தமிழ்உழவர் கூட்டம் வெங்காலூரில் கன்னடியரால் வன்மையாகத் தாக்கப்பட்டு, ஊர்க்காவலர் துணையால் உயிர்தப்பி உடனே

கன்னட நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்தது. அதன்பின் தொடர்ந்து பல நாள் அங்குள்ள தமிழர் கன்னடக் கயவரின் கொள்ளைக்கும் தீவைப்பிற்கும் குத்திற்கும் வெட்டிற்கும் ஆளாயினர்.

திரு. வாத்தல் நாகராசு தகைக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் அவரை விடுதலை செய்யுமாறு மைசூர் முதலமைச்சர் திரு. வீரேந்திரப் பட்டீல், தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. கருணாநிதியார்க்குத் தொலை வரியடித் தார். திரு. கருணாநிதியாரும் வாழ்நாள் தண்டனைக்கேதுவான குற்ற வழக்கை நீக்கித் திரு. வாத்தல் நாகராசை மணமகனை அனுப்பி வைப்பதுபோல் மதிப்பாக இன்னியங்கியிற் கொண்டுபோய் அவரில்லஞ் சேர்க்குமாறு, கோவைத் தண்டலாளர்க்கு உடனே உத்திரவிட்டுவிட்டார். அதன் நிறைவேற்றம் திரு. வாத்தல் நாகராசையும் அவரால் ஏவப்பட்ட கன்னடக்