உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

தமிழ் வளம் உலகெங்கும் திரிந்தும், சிதைந்தும் பரவியுள்ளது. குமரிநாட்டுத் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும். தமிழர் தென் னாட்டுப் பழங்குடி மக்களேயன்றி, ஆரியர்போல் வெளிநாட்டிலிருந்து வந்தவரல்லர்.

தமிழைச் செவ்வையாகக் காத்தற்கும் வளர்த்தற்கும், தமிழ்ப் புலவரும் தமிழுக்குச் சார்பாகவும் மாறாகவும் இருப்பவரைப் பிரித்தறிதல் வேண்டும். தமிழ் நலத்தையே பேணி அதன் தூய்மையைப் போற்றிக் காக்கும் பண்பட்ட தமிழ்ப் புலவர் மறைமலையடிகள் கூட்டத்தார்; தந்நலத்தையே பேணித் தமிழைக் காட்டிக் கொடுக்கும், பண்பற்ற தமிழ்ப் புலவர் வையாபுரி கூட்டத்தார். வையாபுரி கூட்டத் தாரைத் துணைக்கொண்டு தமிழை வளர்ப்பது திருடனைத் துணைக்கொண்டு பணப்பெட்டியைக் காப்பது போலும்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி தமிழ் சமற்கிருதக் கிளையும் பன்மொழிக் கலவையுமாகும் என்று அயலார் கருதுமாறு வையாபுரிப் பிள்ளையைத் துணைக்கொண்டு தமிழ்ப்பகைவரான பிரா மணப் புலவர் தொகுத்தது. ஆதலால் முதற்கண் திருத்த வேண்டும். அதை மொழிநூலறிவும் தமிழ்மொழி யாராய்ச்சியும் சொற்றொகுப்புப் பயிற்சியும் ஒருங்கே யுடையவரே செய்யவியலும். பண்டாரகர் (Dr.) பட்டம் பெற்றவரெல்லாரும் தமிழதிகாரிகளல்லர். ஆதலால், சென்னை அகரமுதலியைத் திருத்தவோ, வேர்ச்சொல் அல்லது சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுக்கவோ ஒரு குழு அமர்த்துவதென்பது, குருடரைக் கொண்டு ஓர் ஓவியத்தைத் திருத்தவோ வரையவோ ஏற்பாடு செய்வதே யொக்கும். பண்டாரகர் பட்டம் பெற்றவர் தாம் ஆய்ந்த பொருளிலன்றி, எல்லாத் துறையிலும் வல்லுந ராகார். அவர் நடிப்பையும் ஏமாற்றையும் அறியவல்ல முதலமைச்சரே பாரதிதாசன் குறித்த தமிழாய்ந்த தமிழ் மகன் ஆவர்.

முதன்மொழி, அலவன்

அலவன் 1971