உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

தமிழ் வளம்

அறுபது நாழிகை ஒரு நாளென்றும், அறுபது அறுபது நாள் ஒரு பெரும் பொழுது என்றும் காலக் கணிப்புண்மையும் 'அறுபதிற்குமேற் கிறுகிறுப்பு' என்னும்

கீழ்நாட்டுக் கொள்கையும், வலுவிறக்கத் (Climacteric) தொடக்கம் அறுபதா மாண்டென்னும், மேனாட்டுக் கொள்கையும் கி.மு. 57-ல் தொடங்கிய விக்கிரம சகாத்தம் என்னும் அறுபானாண்டு மானத்திற்கும், அறுபானாட்டை விழாவிற்கும் கரணியமா யிருந்திருக்கலாம்.

பான்

முக்கால் நூற்றாண்டிற்கும் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட எண் ஆட்டை விழாவைக் கதிரிய விழா (Radium Jubilee) என்னலாம். நூற்றாண்டிற்கு மேற்பட்ட கால விழாவை அருட்கதிர் விழா எனல் தகும். இரசிய தேசச் சாக்சியா நாட்டு சிராலி மிசிலிமோவ் (Shirali Mislimov) என்பவர் 168 ஆண்டுகளும் அவருடைய துணைவியார் பக்கு தாழி (Baku Tadzhi) என்பார் 107 ஆண்டுகளும் வாழ்ந்தனர்.