உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மறைமலையடிகள் நூல் நிலைய மாண்பு தொகுப்பாளரும், மாநாடுகளின்

109

நடவடிக்கைத் தொகுப்பாளரும் நின்றுபோன பழைய செய்தித்தாள் கிழமையன், மாதிகை, காலாண்டிதழ், ஆண்டுமலர் முதலிய தொகுப்பாளரும் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள், நாலடியார் முதலிய நூற்றொகுப்பாளரும் ஆவர்.

இன்று மறைமலையடிகள் நூல்நிலையப் பொத்தகத் தொகை முப்பத்தையாயிரம். இது பிற பெரு நூல்நிலையங்களொடு ஒப்புநோக்கின் சிறிதேயாயினும் அவற்றில் இல்லாத அரு நூல்களையும் தொன் நூல் களையும் கொண்டிருப்பது பாராட்டத்தக்கதாகும். நான் பன்முறை இதை என் பட்டறிவிற் கண்டிருக்கிறேன். அதோடு தமிழ்மொழி யிலக்கிய நாகரிகப் பண்பாட்டு வரலாற்று அரும்பொருட் களஞ்சியமாகவும் காட்சி யகமாகவும் இஃது ஒளிவிட்டுத் திகழ்கின்றது.

ս

அதன்

மறைமலையடிகள் எனக்களித்த நற்சான்றைத் தவறவிட்டபின் படியொன்றை எனக்குத் தந்ததும், திருக்குறள் பழமொழி மொழிபெயர்ப்பையும் அவற்றின் பல்வேறு பதிப்பையும் நூல்நிலையத் தில் வைத்திருப்பதும் தாமரைத் திரு. வ. சு. பிள்ளையின் திறமையை யும் மறைமலையடிகள் நூல்நிலையத்தின் பெருமையையும் சிறப்பக் காட்டும். இதன் அருமையுணர்ந்து அரசு போற்றுவது மிகவும் தக்கதாகும்.