உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

தமிழ் வளம்

விளக்கம்:

2. ஏந்து வசதி.

6

5. சிறு கூட்டத்தைக் குறிக்கும் Squad என்னும் ஆங்கிலச் சொல் சதுரத்தைக் குறிக்கும் Squadra என்னும் இத்தாலியச் சொல்லின் திரிபாகும். சதளம் என்னும் தமிழ்ச்சொல்லும் அங்ஙனமே. சட்டம்- சடம் - சடல் - சடலம் -சதுரம் (சதுரம்); சதளம்-கூட்டம். சதளக்காரன்- பெருங்குடும்பக்காரன்.

,

7. Dress என்னும் ஆங்கிலச்சொல் ங்கிலச்சொல் dresser என்னும் பழம் பிரெஞ்சுச் சொல் வாயிலாக directus என்னும் இலத்தீன் சொல்லினின்று திரிந்ததாகும். Direct, to put Straight.

10.நடு-நடுவு-நடுவம். இம்மூன்றையும் பெயராகவும் குறிப்புப் பெயரெச்சமாகவும் பயன்படுத்தலாம். நடுவம் என்பது பெயரெச்ச வடிவில் நடுவ என்று ஈறு கெடும்.

11. அசையல் என்பது எதிர்மறை வியங்கோள்; ஈரெண் பொது. 21. வரிசையாக, வரிசையமைக என்றும் சொல்லலாம்.

30, 31 நீெளெட்டு, குற்றெட்டு என்றாலும் போதும். வைக்க என்றும் க என்றும் சொல்லலாம். எட்டு நீள்க, எட்டுக் குறுக என்றும்

இடுக

சொல்லலாம்.

"

33. அடியிரட்டுதல்-இட்ட அடியின்மேல் அடியிடுதல்: To step without advancing, to mark mark time. அடியிரட்டித் திட்டாடுமாட்டு" (புறப்பொருள் வெண்பா மாலை. மாலை. 2.8).

34. ஒருகை வணக்கத்திற்குக் கையெடுத்தல் என்னும் சொல் மிகப் பொருத்தமானதாம்.

45. நோடு-வடி வநளவ-உண்ணோடு-to inspect.

47. துலவுதல்-துலாக்கோல் போல் தொங்கப் பிடித்தல், to let rifles hang balanced in one hand. இது வழக்கற்றுப் போன பழஞ்சொல். துல் - துலா - துலாம். துல்-துலை-ஒப்பு. துலாக்கோல் துலாக்கோல் (தராசு). தோல் என்னும் இந்திச்சொல் துல் என்பதன் திரிபே.

43. படைக்கலம் என்பது arm என்பதுபோல பொதுச்சொல், துப்பாக்கி என்பது துபக் என்னும் துருக்கிச் சொல். துமுக்கி என்பது தமிழ்ச்சொல்.

44. காவல்மேல் என்பது வேலைமேல் என்பது போன்றவழக்கு. ஏவல்வினைகள் செய்ய, செய்க என்னும் இருவடிவில் உள்ளன. இவை ஈரெண் பொது. சதளம் என்னும் தொகுதிப் பெயரை ஒருமையாகக் கொண்டு செய் என்னும் ஒருமை வடிவிலும் ஏவலாம். பயிற்சியாசிரியர் வேண்டிய திருத்தமும் செய்துகொள்ளலாம்.