உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதிப்புரை மாலை

123

வற்புறுத்துவது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை; அல்லது அகதிக்கு அறமே துணை; கெடுவான் கேடு நினைப்பான்; இருதலைக் காதலே ன்பந்தரும்; 'மெய் வெல்லும், பொய் தோற்கும்' என்பன இப் பனுவற் கதையால் உணர்த்தப்பெறும் உண்மைகளாகும்.

ஒரு பனுவலாசிரியனின் மதிநுட்பமும், அறிவுப் பரப்பும், அவன் செய்யுள் திறமையால் மட்டுமன்றிக் கதையமைப்பாலும் வெளிப்படுவன வாம். இப் பனுவலாசிரியர் செய்யுட் செய்வதிற் போன்றே புதுக்கதைப் புனைவிலும் தேர்ச்சி பெற்றிருப்பது பாராட்டத்தக்கது. குல, மத, கட்சிச் சார்பின்றித் தமிழாக்கம் ஒன்றையே கருதும் சான்றோர், பிற்காலத்துப் பெரும் பாவேந்தராதற் கேற்ற இவ்விளம் பாவலரைப் பெரிதும் ஊக்கக் கடவர்.

'கொய்யாக்கனி' யென்னும் இப் பனுவல் எல்லாத் தமிழர்க்கும் கொய்யுங் கனியாகுக!

பழந்தமிழ் இசை

(கு. கோதண்டபாணிப்

பிள்ளை)

21.9.1955

எகித்தியம் உட்பட உலகிசை யனைத்திற்கும் தமிழிசையே தாயாயி னும், கடந்த ஐயாயிரம் ஆண்டுகளாகத் தமிழ், தமராலும் மாற்றாராலும் (பெரும்பான்மை இலக்கியமும் சிறுபான்மை மொழியும்) சிறிது சிறிதாக மறைப்பும் குறைப்பும் அழிப்பும் பழிப்பும் உற்று, தலைமைத் தமிழ்ப் புலவராலும் தக்கவாறு அறியப்படாது போயினமையின், இன்று, மகள் தாயைப் பெற்றாள் என்னும் முறையில் இயற்றமிழ் வடமொழி வழியதென்றும், இசைத் தமிழ் கருநாடக சங்கீத வழியதென்றும், நாடகத் தமிழ் பரத சாத்திர வழியதென்றும், உண்மைக்கு மாறான கருத்துக்கள் உலவியும் ஓரளவு நிலவியும் வருகின்றன.

கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குமேல் முற்றும் மறையுண்டுபோன இசைத் தமிழிலக்கணத்தை இதுவரை ஆராய்ந்த அறிஞர் : காலஞ் சென்ற, தஞ்சை (இராவ் சாகிபு) ஆபிரகாம் பண்டிதர், மதுரை இசைக் குழல் (நாதசுரம்) பொன்னுச்சாமிப் பிள்ளை, ஈழத்து விபுலானந்த அடிகள் ஆகியமூவரும்; இதுபோது வாழும், கோவை இசையணிகலம் (சங்கீத பூஷணம்) இராமநாதன், சென்னை (ஓய்வு பெற்ற துணைத் தண்டலாளர்) இராவ் சாகிபு கு. கோதண்டபாணிப் பிள்ளை இருவரும் ஆவர்.

ஆகிய

இவருள்; ஆபிரகாம் பண்டிதர், ஆயப்பாலை வட்டப்பாலைத் திரிவு முறைகளைக் கண்டார்; பொன்னுச்சாமிப் பிள்ளையார் தாய்ப் பண்கள் (மேளகர்த்தாக்கள்) முப்பத்திரண்டே என்றும், இசை இடங்கள் (சுரத் தானங்கள்) பன்னிரண்டே, பதினா றல்லவென்றும் கண்டார்; விபுலானந்த அடிகள் விழுமிய ஆராய்ச்சியாளரேனும், அடிப்படை தவறாகக் கொ காண்டமையின் பலவுண்மைகளைக் காணவியலாது போயினர்; இராமநாதனார் மயங்கா மரபின் இசைமுறை காட்டிக் குரலே