உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142

தமிழ் வளம் வரைந்த தமிழ் முனைவர் காலம் கி. மு. 10,000 ஆண்டுகட்குமுன். ஆரிய ரிய வரு கைக்கு முற்பட்ட தனித் தமிழிலக்கணங்களெல்லாம் அழிந்தும் அழிக்கப் பட்டும் போயின. தமிழ் முதனூலின் தொன்மை வரலாற்றிற் கெட்டாதது.

  • 'துணங்கை' எனும் நாட்டிய வகை தற்காலத்துக் காணப்படும் "Rock'n Roll" வகையைச் சேர்ந்தது என்று சிலர் கூறுவது உண்மையா? இல்லெனின் அஃது எவ்வகையைச் சேர்ந்தது?

துணங்கை குரவைக் கூத்து வகையைச் சேர்ந்தது.

ஆ. வேலாயுதம், கொழும்பு.

வள்ளுவர் திருநாள் ள் கொண்டாடுவது பற்றி நால்வகைக் கருத்துக்கள் இங்கு நிலவுகின்றன. (1) தை முதல் நாள் (2) மாசி உத்தரம் (3) பங்குனித் திரு வோணம் (4) வைகாசி அனுடம் ஆகிய நாட்களில் கொண்டாடலாம் என நான்கு பிரிவினர் கூறுகின்றனர். இவைபற்றித் தங்கள் கருத்துகள் யாவை?

வள்ளுவர் திருநாளைப்பற்றி இற்றை நிலையில் திட்டமாய் ஒன்றும் சொல்லவியலாது. தை முதல் நாள் பொங்கல் விழாவாதலால் வேறொரு நாளில் வள்ளுவர் திருநாளைக் கொண்டாடுவது நல்லது. அதை அறிஞர்கூடி முடிவு செய்தல் வேண்டும்.

சரவணக்குமார், சென்னை.

காமம் என்பது தமிழ்ச் சொல்லா? காமத்திற்கும் காதலுக்கும் உள்ள வேறுபாடென்ன? காமம் இழிந்ததென்றால் வள்ளுவர் "காமத்துப்பால்" என்று அமைத்ததேன்? அதை 'இன்பத்துப்பால்' என்று சிலர் கொள்வது பொருந்துமா?

'காமம்' தமிழ்ச் சொல்லே. காமம் கணவன் மனைவியரிடைப்பட்ட பேரன்பு; காதல் பிறரிடைப்பட்ட பேரன்பு. வள்ளுவர் காலத்தில் காமம் என்னும் சொல் பிற்காலத்திற்போல் இழிவடையவில்லை. இன்பம்' பொதுச் சொல்லாதலால், காமம் என்னும் சிறப்புச் சொல்லை ஆள்வதே நன்று.

கோ.

7

மலையரசன், மலாயா.

தமிழின் பீடழிக்கும் இந்தியை எதிர்த்தழிக்கும் நோக்கோடு சிலர் ஆ ங்கிலத்தையும் எதிர்க்க விழைவது அறிவுடைமையா? ஆங்கிலத்தை எதிர்ப்பது அறிவுடைமையாகாது.

இராசசுந்தரம், சித்திரச் சாவடி.

'இனிமை'யி லுறைநல் லெழில்சேர் 'ழ'வுடன் இலங்கும்

உம் எம்மொழி உடைத்து