உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

தமிழ் வளம்

கேரள நாட்டில், அரசும் பல்கலைக் கழகமும் இணைந்து வெளி யிட்டுவரும் வரும் எழுமடல் மலையாள-மலையாள-ஆங்கில அகரமுதலிப் பணி 1953-இல் தொடங்கிற்று. பன்னிரண்டு சொற்றொகுப்பு வேலை முடித்துக்கொண்டு,

முப்பத்தறுவரைக் கொண்ட பணிக்குழு, ஐயாண்டிற்கொரு மடலமாக வெளியிட்டு வருகின்றது. இதுவரை மும்மடலம் வெளிவந்துள்ளன. இன்னும் நான்கு வெளிவரல் வேண்டும். வேண்டும். அதற்கு அதற்கு இன்னும் இருப தாண்டு செல்லும். ஆண்டுதொறும் பல்கலைக் கழக நல்கைக்குழு பணமுதவி வருகின்றது, வருகின்றது, ஐயாயிரம் ஐயாயிரம் படிகள் அச்சிடப்படுகின்றன. மொத்தச் செலவு ஒருகோடியிருக்கலாம்; மேற்படினும் படலாம்.

ஏனை மொழி யகரமுதலிகளெல்லாம், எத்துணை விரிவான வேனும், சொற்பொரு ளகரமுதலிகளே. அவற்றுள் ஒரு சில, சொற் பிறப்பிய லகர முதலி யென்று பெயர் பெற்றிருப்பினும், உண்மையிற் சொற்பிறப்பியல் அகரமுதலிகளல்ல; ஒப்பியல் (comparative) அகர முதலிகளே. ஏனெனின், இயன்மொழியாகிய தமிழிற்போல் திரிமொழி களாகிய ஏனையவற்றிற் சொற்களின் வேரையும் முழு வரலாற்றையும் அறியமுடியாது.

ஆதலால், உண்மையான சொற்பிறப்பியல் அகரமுதலி (Etymo- logical Dictionary) தமிழில்தான் இருக்கமுடியும்.

இன்று தொகுக்கப்பட்டுவரும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி, சொற்பொருள், சொற்பிறப்பியல் என்னும் ஈரியல்புகளையும் ஒருங்கே கொண்டது. இதன் பணி கீழ்வருமாறு எண்கூற்றது.

1.

2.

3.

இதுவரை வெளிவந்த தமிழகர முதலிகளிளெல்லாம் இல்லாத எல்லாச் சொற்களையும் இயன்றவரை எடுத்துப் பொருள் கூறுவது.

ஏனை யகரமுதலிகளிலுள்ள தவறான சொல் வடிவுகளைத் திருத்துவது.

(எ-டு): அரிவாள்மனைப் பூண்டு (வழு)-அரிவாள்முனைப்

பூண்டு (திருத்தம்).

ஏனை யகரமுதலிகளில் விடப்பட்டுள்ள பொருள்களையெல் லாம் இயன்றவரை எடுத்துக்கூறுவது.

4.

ஏனை

பொருள்களை யெல்லாம் திருத்துவது.

யகரமுதலிகளிற் குறிக்கப்பட்டுள்ள

(எ-டு): அளைமறிபாப்பு (ப்பொருள்கோள்)

தவறான

பாட்டின்

ஈற்றினின்ற சொல் இடையிலும் முதலிலுஞ் சென்று சென்று பொருள் கொள்ளப்படு முறை (வழு).