உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

தமிழ் வளம் பாளருக்கு ஆண்டிற்கு ஐம்பது உருபாவிற்கு மேல் தண்டும் ஆற்றலே இல்லை. சிலர்க்குக் கிளையமைக்குந் திறனுமில்லை. சிலர்க்குக் குடும்பம் பெருத்துப் பொருளாசை மேலிட்டபின் தமிழ்ப் பற்றுத் தானே நீங்கி விடுகின்றது. சிலர்க்குத் தாம் பதவியில் இல்லாவிடின், தம்

கிளைகள் மட்டுமன்றிப் பிறகிளைகளும் முறிந்து விடவேண்டுமென்பது பேரவா. சிலர் ஆட்டைவிழா மாநாடுகளைத் தகுந்த முறையில் நடத்த வழிவகை தெரியாது, தலைமையகத்திற்குப் பணம் மீத்துத் தராதிருப்ப தோடு அதனைக் கடனுக்குள்ளும் முழுக்கி விடுகின்றனர். ஒரு சிலரோ தம் அறிவையும் ஆற்றலையும் அளந்து பாராது, பாசறையும் படையணி யும் அமைப்பதிலேயே கண்ணுங் கருத்துமா யிருக்கின்றனர்.

இத்தகைய குற்றங் குறைகளெல்லாம் நீக்கிச் சட்டர்சிகளையும் தெ.பொ.மீ.க்களையும் அவர்க்குக் கட்டியங் கூறித் திரியும் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்களையும் பட்டிமன்றத்தில் வீழ்த்தி, குமரி நாட்டுத் தமிழே திரவிடத்தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மை உலகமேடையில் நாட்டப்பட்டபின், உ.த.க. உயர்ந்தோங்கிக் கதிரவனுந் திங்களுமுள்ள காலமெல்லாம் நிலைத்து நிற்கும் என்பதை முற்கரணியாக (தீர்க்க தரிசியாக) உறுப்பினர்க்கு அறிவிக்கின்றேன்.

உண்மையான தமிழ்ப்பற்றுள்ள மாவட்ட அமைப்பாளரும் (அவரில்லா விடத்து) ஊக்கம் மிகுந்த உறுப்பினரும் அச்சுப்படிவம் வரும்வரை வெண்டாளிற் கையெழுத்திற் சேர்ப்புப் படிவங்களை எழுதி நிரப்புவித்து, ஆயிரக்கணக்கான புத் துறுப்பினரைச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஆட்டைக்கட்டணம் தொடக்கத்திற்போல் ஒரு ருபாதான் (உருபா 1-00)

சேர்ப்புப்படிவங்கள் தலைமைச் செயலாளருக்கும், உறுப்பாண் மைக் கட்டணத்திற்பாதி பொருளாளருக்கும் விடுக்கப்படல் வேண்டும். வருகின்ற நளி 11ஆம் பக்கல் (27.11.1971) காரி முற்பகல், திருச்சி அசோகாவுண்டிச் சாலையில், ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெறும். அன்று ஆட்டை விழா நடப்பு முறையும் பிறவும் முடிவு செய்யப்பெறும். அமைப்பாளரும் உறுப்பினரும் பணத்தொடு வருக.

உ.த.க. தலைவன்