உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உ.த.க. மாவட்ட அமைப்பாளருக்கு உடனடி வியங்கோள்

73

குருடர்க்கு யானை துடைப்பக்கட்டை யளவிலும் தூணளவிலும் தோன்றியது போல, குன்றிய அறிவுடையர்க்குக் குன்றின் அளவினரும் குன்றிமணியளவிலேயே தோன்றுவர்.

தமக்குத் தமிழ்ப் பற்றின்மையைத் தம் சொல்லாலும் செயலாலும் தெளிவாகக் காட்டிக்கொள்பவர், தமக்குந் தமிழ்ப்பற்றுண்டென்று கூறு வது, ஊமையாக நடித்து இரப்பெடுத்து வாழ்ந்த ஒருவர், பிறர் தன்னை ஐயுற்றபோது, "நான் பிறப்பிலிருந்து ஊமை என்று சொன்னதையே ஒக்கும்.'

அகப்பகையும் புறப்பகையுங் கலந்த எந்த இயக்கமும் உருப்படாது. ஆதலால், தனித்தமிழ்ப் பற்றும் கட்சிச் சார்பின்மையும் ஒருங்கே யுள்ளவரையே உ.த.க. உறுப்பினராகச் சேர்க்க. அல்லாரைச் சேர்க்கற்க. ஏற்கெனவே சேர்த்திருப்பின் உடனே நீக்கி விடுக. களை களை முளையிற் களையாவிடின் பயிர் விளைந்து பயன்தரா. ஒருசில பயிரேயாயினும், மேலும் மேலும் வித்து விளைந்து நாளடைவில் உலகப் பரவப் பல்கிவிடும். உலக முழுதும் பரவியுள்ள கிறித்தவம், முதற்கண் கிறித்துவின் பன்னிரு பின்செல்லியராற் பரப்பப்பட்டதே. இன்னும் ஐந்தாண்டிற்குள் உ.த.க. இயக்கம் வெற்றிபெறுவதும், தனித் தமிழ் அரியணை யேறுவதும், தெரிதரு தோற்றமாம்.

சேர்ப்புப் படிவத்தில் தவறாகக் குறிக்கப்பட்டுள்ள

குறிப்பை அடித்துவிடுக.

"வாய்மையே வெல்லும்"

கட்சிக்

-உ.த.க. தலைவர்.