உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

தமிழ் வளம் முறை பண்டாரகரின் பழைய மாணவரும், குடந்தைப் பொன் வணிகரு மான திரு. ப. தி. சொ. குமார சாமி அவர்கள் சென்னை வந்து பண் டாரகரைக் கண்டு "ஐயா நலமாயிருக்கிறீர்களா?" என்று அன்புடனும், ஆர்வத்துடனும் வினவ பண்டாரகர் கடும் புலிபோல் பாய்ந்து, "என்ன உங்களுக்குச் சமஸ்கிருதத்தின் மேல் இவ்வளவு

துவேஷம்? க்ஷேமம் என்று சொல்லக்கூடாதா? ஏன் நலமென்று வழக் கற்ற சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள்?" என்று சீறி விழுந்தாராம். றி சென்ற ஆண்டு திரு. காஞ்சி காமகோடி பீட சங்கராச்சாரியாரவர்

கள்

குறளை சென்றோதோம்" என்னும் ண் டாள் கூற்றிற்கு குறளைச் சென்றோதோம்" என்று திரித்து ஓரிடத்திற் பொருள் கூறியதுபற்றி ஆட்சி மொழிக் காவலர் திரு. கி. இராமலிங்கனார் (எம்.ஏ.) வினவச் சென்றிருந்தபோது, ஆச்சாரியாரவர்கள் (தமிழறிந்திருந்தும்) வடமொழி யில் விடை இறுக்க அதை அவர்களது அணுக்கத் துணைவர் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினராம். அதன்பின், ஆட்சி மொழிக் காவலர், "ஐயா! அடிகளுக்குத் தமிழ் நன்றாகத் தெரியுமே! அங்ஙனமிருந்தும் ஏன் வடமொழியில் விடை இறுக்க வேண்டும்?" என வினவ, அணுக்கத் துணைவர், "ஆச்சாரியார் சுவாமிகள் பூஜை வேளையில் நீ ச பாஷையில் பேசுவதில்லை, என மறுமொழி தந்தனராம்!

"

தமிழ் மக்காள்! தமிழ் மாணவர்காள்! தமிழ்ப் புலவர்காள்! பார்த்தீர் களா தவத்திரு. சங்கராச்சாரியாரவர்கள் கடுங்கூற்றை! தமிழ் இழிந்தோர் மொழியாம்! ஆங்கிலக் கல்வியும் மொழியாராய்ச்சியும் மிக்க இவ்விரு பதாவது நூற்றாண்டிலும் தமிழுக்கு இத்துணை இழிப்பும் பழிப்பும் ஏற்படுமாயின், வடமொழி தேவ மொழியென்றும், பிராமணர் நிலத் தேவர் (பூசுரர்) என்றும் முற்றும் நம்பப்பட்ட பண்டைக்காலத்தில் இவை எத்துணை மிக்கு இருந்திருத்தல் வேண்டும் என்பதை உய்த் துணர்ந்து கொள்க.

உண்மையில் தேவமொழி தமிழே! இழிமொழி வடமொழியே! இதை என் 'The Primary Classical Language of the World' என்னும் ஆங்கில நூலிலும், 'வடமொழி வரலாறு' என்னும் தமிழ் நூலிலும் கண்டு கொள்க.