உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

தமிழ் வளம் 1925 முதல், குமுகாயத்துறையில், முன்பு தன்மான (சுயமரியாதை) யக்கமும் பின்பு பகுத்தறிவியக்கமுங் கண்டு ஒப்புயர்வற்ற தொண்டாற்றி வருபவர் ஈ. வெ. ரா. பெரியார்.

இன்று நயன்மைக் கட்சியுடம்பும் பகுத்தறிவுக் கட்சியுயிரும் ஓரளவு தனித்தமிழ்க்கட்சியுள்ளமுங் கொண்டு தமிழர் அல்லது தமிழ் நாட்டார் முன்னேற்ற வினையை ஒல்லும் வகையால் செல்லும் வாயெல் லாம் செய்து வருவது தி. மு. க. அரசே. ஆயினும், "பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் கொல் குறும்பும்" அதன் தனித்தமிழ்த் தொண்டைத் தடுத்துவிடுகின்றன. அதனாலேயே, 1969இல் உ. த. க. தோற்றுவிக்கப்பட்டது.

எந்த வயலிலும் களைகள் முளைப்பது போன்று, எந்த இயக்கத்தி லும் சில தன்னலப் புல்லர் தோன்றிக் கெடுக்கத்தான் செய்கின்றனர். தனித்தமிழாலும் உண்மை வரலாற்றாலும், தமிழை வடமொழிப் பிணிப்பி னின்று மீட்பதே தமிழன் முன்னேறும் ஒரே வழியென்று கண்டு உ.த.க. மறைமலையடிகளின் தனித் தமிழியக்கத்தை மேற்கொண்டுள் ளது. (உண்மை வரலாற்றில் மூடநம்பிக்கை யொழிப்பும் அடங்கும்) தமிழுக்கும் ஆரியம் என்னும் சமற்கிருதத்திற்கும் இடைப்பட்ட உறவு தன்உரிமையிழந்த வழக்காடிக்கும் பிறன் உரிமையைக் கவர்ந்த எதிர் வழக்காடிக்கும் இடைப்பட்டதாதலால், ஒரு வழக்காட்டோ போராட்டமோ இன்றித் தமிழை வடமொழியினின்று மீட்க முடியாது. தமிழ் விடுத லையே தமிழன் விடுதலை. மூவாயிரம் ஆண்டாகத் தொடர்ந்து வந்து தமிழன் மூளையிலும் குருதியிலும் எலும்பிலும் நரம்பிலும் ஊறிப்போன ஆரிய அடிமைத்தனத்தை ஓரிரு நாளில் அல்லது ஒரு சிலர் ஒழிப்பதென்பது பித்தன் பிதற்றலே யாகும்.

கூடி

போர்க் களத்திற்குப் படைக்கலம் போற் போராட்டத்திற்கும் சில கருவி நூல்கள் வேண்டும். பல வெளிவந்துள்ளன; இன்னும் மூன்று வெளி வரல் வேண்டும். அவை 'தமிழர் வரலாறு', 'தமிழர் மதம்', 'A Guide to Western Tamilologists' என்பன. அவற்றுள் முன்னி ரண்டு இவ்வாண்டும், இறுதியது அடுத்த ஆண்டும் வெளிவரும், அதன் பின், தமிழ்-ஆரியப் போராட்டம் தொடங்கி முழுவெற்றி காணும்வரை தொடரும், அதற்குள், ஆரியத்தை யெதிர்க்கும் அறிவும் ஆற்றலும் அறவேயில்லாத சில தான்றோன்றிச் சிறுப்பெரியார்கள், பரபரப்பும் பதற்றமுங் கொண்டு கருத்தொத்த பதின்மரைக் கூட்டிப் பாசறையும் படையணியும் அமைத்திருப்பதாகத் தெரிகின்றது. இம்முயற்சிக்கு முழுத் தகுதியுள்ள பெரியாரே காலமும் கருவியும் துணையும் பார்த்துக் காத்தி ருக்கும் போது, இச்சிறுப் பெரியார் செய்த செயல் எள்ளி நகையாடத் தக்கதே.

உ. த.க. அமைப்பாளர், இத்தகைய சிற்றியக்கங்களில் ஈடுபட்டுத் தம் பதவியையும் உறுப்பாண்மையையும் தாமே இழவாதிருப்பாராக. ஓரியக்கத்திற்குள் அதற்கு மாறான மற்றோரியக்கம் இருத்தல் இயலாது. "மரத்தின் கீழாகா மரம்".