உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கோஇள வழகா உன்னைக் குன்றின்மேல் வைத்துப் பார்ப்போம் வா இளவழகா இந்த

வையத்தைத் தமிழ்மண் ணாக்கித்

தா இவழகா இன்னும்

தாய்நூல்கள் யாவும் நெய்து

பா இள வழகர் கூடிப்

பாராட்டி வாழ்த்து கின்றோம்!

கலப்பிலாத் தமிழைக் கண்டால்

களிப்பிலே மூழ்கிப் போவாய்

உழைப்பில்லார்க் கென்றும் இங்கே

ஊதியம் இல்லை யென்று

மொழிப்புலம் யாவும் கண்ட

முதல்வராம் பாவாணர் நூல்

மலைப்புறப் பதிவு செய்தாய்

மனம் ஏத்தி வரவேற் கின்றோம்!

உயிர்த்தமிழ் உலகை ஆள

உயர்வோடு தமிழர் வாழ

பயிர்மூடும் களைகள் வீழ

பாரெலாம் நம்மைச் சூழ

அயர்வின்றி உழைத்த மேலோன்

அறிஞர்க்கே அறிஞர் என்றும்

பெயல்நிகர் பாவாணர்தம்

பெருமைக்குப் பெருமை சேர்ப்போம்!

'பா' ஆக்கம் - மலேசியாப் பாவரசு ஐ. உலகநாதன்

தமிழ்மன்

கட்டளை

அறக்கட்ட

சென்னை

sேati

600 017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 17.