உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழின் தொன்மை

51

வெள்ளம் என்ற சொல், புதுப் பெருக்கு நீரைக் குறிக்கிறது அது தமிழ். மலையாளத்தில் எல்லாம் வெள்ளம்தான். எங்கிருந்தாலும் வெள்ளம் தான். சிறு கொட்டாங்கச்சியிலே இருந்தாலும் அது வெள்ளம் தான். நமக்கு அப்படியல்ல, புதுப்பெருக்கு நீர்தான் வெள்ளம்.

செப்புதல் என்றிருக்கிறது. விடை சொல்வதைத்தான் தமிழிலே செப்புதல் என்கிறோம். தெலுங்கிலே பொதுவாக எதைச் சொன்னாலும் செப்புதல் என்பதையே குறிக்கும். இப்படிச் சிறப்புச் சொல்-சிறப்புப் பொரு ளானது வேறுபடுத்திக் காட்டுகிறது. அது தமிழினுடைய செம்மையைச் சிறப்பித்துக் காட்டுகிறது.