உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

பாவாணர் உரைகள் வீற்றிருந்து இந்த நாட்டுக்குரிய சட்டங்களை எல்லாம் நிறை வேற்று கின்றவர் முதலமைச்சர்தான்.

ஆகையால், அவர்கள் அரச பதவியிலும் இருக்கின்றார்கள் என்பதை நாம் அறிய வேண்டும். அது இவர்கள் ஆட்சியிலே செய்து காட்டியது. ஒருவர் புரியியல், தெரியியல் என்ற இரு பகுதிகளை ஆய்ந் ரு தறிவர்; அதாவது தியரிடிகல், பிராக்டிகல் என்று வைத்துக் கொள்ளலாம். இந்த அறிவியல் ஆராய்ச்சியை எடுத்துக் கொண்டால் சி.வி. இராமன் தெரியியலில் சில உண்மைகளைக் கண்டுபிடித்தவர். ஆனால் கோவை கோ. துரைசாமி நாயுடு இருக்கின்றாரே, அவர் புரியியலில் சில புது புதுக் கருவிகளைக் கண்டு பிடித்துள்ளார். அந்த முறையிலே தான் கலைஞர் தமிழவேள் அவர்கள் இந்த ஆட்சிக் கலையில் நமக்கு வெளிப்படையாக விளக்கி எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.

தேர்தல் நேரத்தில்

சென்ற ஆண்டிலே ஒரு தேர்தல் வந்தது. அந்த சமயம் இந்தச் சட்ட மன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தலுக்கு நிற்பதா அல்லது முறைப்படி இன்னும் நான்கு ஆண்டு இருப்பதா என்று சிலர் கருதினார்கள்.

நிலைத்து இருப்பதுதான் நல்லது, திடீரென்று ஏதேனும் நேர்ந்தாலும் நேர்ந்துவிடலாம் என்ன செய்வது என்று. ஆனால் அவர்கள் துணிந்து கலைத்து விட்டார்கள் “சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது" என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கின்றார்கள். அந்த ஆட்சிக்கலைப்படி அவர்கள் கலைத்து விட்டார்கள்.

அது மட்டுமன்று. போன தேர்தல் எப்படிப்பட்டது என்று சொன்னால் அது என்ன நேருமோ என்று எல்லோரும் மிக மிக அங்கலாய்த்துக் கொண்டிருந்த நேரம். அது அவர் மட்டும் தலைவராக இல்லாமலிருந்தால் கட்சியும் தோற்றுப் போயிருக்கலாம். நம் தமிழர்களுடைய நிலைமையும் இனிமேல் திருந்தாதபடி மிகக் கெட்டுப் போய் இருக்கலாம்.

ஆனால் அது இறைவனுடைய திருவருள். அவருடைய ஆற்றல் அதில் அவர்கள் முழு வெற்றி பெற்றர்கள்.

நாம் புதுப் பேராயத்தில் (புது காங்கிரசு) சேர்வதா பழைய பேராயத்தில் சேர்வதா என்று புதிராக இருந்தது. ஒரு பெரிய புதிர். அதில் அவர்கள் புதுப் பேராயத்தில் தான் சேர வேண்டுமென்று துணிந்தார்கள். அது ஒரு நல்ல தீர்மானம். இப்பொழுது நமக்கும் நடை முறையில் தெரி கின்றது.

மதுவிலக்குப் பிரச்சினையில்...

அடுத்தாற் போல மதுவிலக்குச் செய்தி ஒன்று வந்தது. இதை நாம் நிறுத்துவதா அல்லது ஏற்கனவே இருக்கின்றபடி அந்தப் பேரை காத்துக்