உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

பாவாணர் உரைகள் தோன்றிய மொழி. அது இந்த 'தியூத்தானியம்' என்ற பிரிவைச் (Teutonic) சேர்ந்து. உலகத்திலே உள்ள சிறந்த மொழிகள் எல்லாவற்றையும் மாக்கசுமுல்லர் (F. Maxmuller) மூன்று பெரும் பிரிவாக வகுத்திருக்கின்றார். (1) ஆரியக்குடும்பம் (Areyan) (2) சித்தியக் குடும்பம் (Scythian) எனப்படும் துரேனியக்குடும்பம் (Turanian) (3) சேமியக்குடும்பம் (Semitic) என்றும். அதற்குள்ளே - தியூத்தானிக் என்பது ஒன்று, தியூத்தானிக்கைச் சேர்ந்தது இந்த ஆங்கிலமொழி. ஆங்கிலத்துக்கும் நமக்கும் மிகுந்த நெருக்கமுண்டு. அதைச் சொல்வதற்கு நேரமில்லை. அது நால்வடியாகப் பின்னாலே வெளிவரும், உலகமுழுவதும் அறிவதற்கு. (குறிப்பு-2)

இந்த மன் என்ற தமிழ்ச்சொல் ஆங்கிலத்திலே Man என்று இருக்கிறது. அதைத்தான் சமற்கிருதத்தில் அவர்கள் மனு என்று விரித்தார்கள். இந்த மனுவிலிருந்துதான் மனுஷ என்ற சொல் பிறகு திரிகின்றது.

ஆகவே இதற்கெல்லாம் மூலம் இந்த மன் என்ற சொல்தான். அவர்கள் தமிழ் அறியாததினாலே, thinking man - man is thinking ani- mal – அவன் கருதுகின்ற ஆற்றலுடைய ஓர் உயிரினம்-உயிர்ப் பொருள். கையினாலே munan (to think) அதிலிருந்து வந்தது என்று கருத்துச் சொல்வார்கள். ஆனால் அந்த மன் என்கிற சொல் கருதுதலைக் குறிக்கிறது மனு என்ற சொல்லானது தமிழ் 'முன்' என்றதிலிருந்து வந்தது.

முன்னுதல் என்றால் கருதுதல் தமிழிலே அப்படியே ஆங்கில பேரகர முதலியிலே முனன் (Munan) என்றே இருக்கிறது. (Munan to think) என்று இதே வடிவத்திலே இருக்கிறது. முன் என்றால் கருது என்று பொருள். அது வேறு சொல். பழைய நிகண்டுகளைப் பார்ப்பீர்களானால் மனத்திற்கு முன்னம் என்றிருக்கும்.

முன்னம் – முனம் – மனம் (உள்ளம்.

உகரம் அகரமாகத் திரியும்போது மனம் என்றாகிறது. (குறிப்பு 3) அந்த மனம் என்பதை மனஸ் என்பார்கள் சமசுகிருதத்திலே. மகர ஈறு ஸகர ஈறாக மாறும். சமசுகிருதத்திலே. அது இலத்தீனிலே மெனசு (Mens) என்றிருக்கிறது. இப்படி மேலை ஆரிய மொழிகளெல்லாம் திரிந்திருக் கின்றன. இன்னும் ஒரே ஒரு சொல் 'ஊர்' எனும் பேரை நான் சொல்கிறேன்.

இங்கே இந்தியாவிலே உள்ள இந்தூர் முதலான பெயர்கள் மட்டுமல்ல, அங்கே பாபிலோனியா நாட்டிலே ஊர் என்று ஓர் ஊர் இருந்தது. அந்தப் பேருக்கே - அந்த சொல்லிற்கே அக்கேடியன் (Akkadian) மொழியிலே அந்த சுமேரியன் மொழியிலே City என்றுதான் பொருள். அதே பொருளிலே தான் தெற்கேவழங்கினது, குமரிநாட்டிலே இந்தச் சொல்.

உர்-உல்-உறு

உர்-ஊர்

உல் என்பது உறு என்று இப்போது வழங்குகிறது.

-