தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
107
தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
மயிலைநாதர், நன்னூலின் சார்பெழுத்துத் தொகை நூற்பாவுக்கு,
66
எழுத்தெனப் படுப....... மூன்றலங் கடையே'
99
107
என ஆசிரியர் தொல்காப்பியனாரும் இவ்வாறு முதல் சார்பென வகுத்துக்கொண்டா ரென்க. அஃதே, அவர் சார்பெழுத்து மூன்றே கொண்டா ராலோ வெனின், அஃதே, நன்று சொன்னாய்! ஒழிந்தவை எப்பாற்படு மென்றார்க்கு மூன்றாவதொரு பகுதி சொல்லலாவ தின்மை யானும், முதலெழுத்தாந் தன்மை அவற்றிற்கின்மையானும், சார்பிற் றோன்றுத லானும், இப் பத்தும் சார்பாகவே கொள்ள வேண்டுமென்பது. அஃதே அமைக. ஒற்றளபெடையும் ஐகாரக் குறுக்கமும் யாண்டுப் ஔகாரக் குறுக்கமும் மகரக் குறுக்கமும் ஆய்தக் குறுக்கமும் பெற்றாமோ வெனின், வன்மையொடு ரஃகான் ழஃகா னொழிந்தாங்
66
66
கன்மெய் ஆய்தமோ டளபெழும் ஒரோவழி.
அளபெடை தனியிரண் டல்வழி ஐஔ
உளதாம் ஒன்றரை தனிமையு மாகும்.
'பதினெண் மெய்யும் அதுவே மவ்வோ
99
டாய்தமும் அளபரை தேய்தலும் உரித்தே”
99
என்றார் ஆசிரியர் அவிநயனாரும் எனக் கொள்க” என வுரைத்துள்ளார்.
இதில், அவிநய நூற்பாவே போதுமாதலின், தொல்காப்பிய நூற்பா எடுத்துக் கூறப்படவில்லை. அதனால், தொல்காப்பிய மகரக் குறுக்க நூற்பாவைப்பற்றி நாம் ஐயுற வேண்டியதில்லை. இகரக் குறுக்கம், உகரக் குறுக்கம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் முதலியன வும் தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ளன. ஆயினும், அவற்றையெல்லாம் மயிலைநாதர் மேற்கோளாகக் காட்டவில்லை, அங்ஙனமே மகரக் குறுக்கமும் என்க.
இனித் தொல்காப்பிய மகரக் குறுக்க நூற்பா பிற்காலத்ததாயின்,
'செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
னகார மகாரம் ஈரொற் றாகும்.
66
னகாரை முன்னர் மகாரங் குறுகும்
(மொழி. 18)
(மொழி. 19)
என்பனவும் பிற்காலத்தனவேயாதல் வேண்டும். அங்ஙனம் ஆகாமை
காண்க.
கூற்று
ஒலியன்களின் பாதீடு
"பிராதிசாக்கியங்களும் ஒலியன்களின் பாதீட்டை விரித்துக் கூறு கின்றன. நன்னூல் அதை முதலீறிடைநிலை யென்கின்றது. தொல் காப்பியர், எங்ஙனமிருப்பினும், முதலிலும் இறுதியிலும் வரும் ஒலியன்களை