தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
111
தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
111
கூறுவது பொருந்தாது. பிற்காலத்தார் ஐகார ஔகாரங்களை நெடில்களாகச் செய்யுளில் ஆள்வதன் இடர்ப்பாட்டை உணர்ந்த போது, போலிக் கொள்கையைப் புகுத்தியிருத்தல் வேண்டும்.
மறுப்பு
மகரக்குறுக்கத்தை மொழிமரபிற் கூறியது, கூறியது கூறல் என்னுங் குற்றமன்று. நூன்மரபில் எழுத்துகளின் மாத்திரை யளவைக் கூறுமிடத்து, மகரக்குறுக்க மாத்திரை காலென்று கூற நேர்ந்தது. மொழிமரபில் மகரக் குறுக்கம் நிகழும் இடத்தைச் சொல்ல வேண்டியிருந்ததனால்,
“செய்யு ளிறுதிப் போலி மொழிவயின்
66
னகார மகாரம் ஈரொற் றாகும்'
னகாரை முன்னர் மகாரங் குறுகும்"
(18)
(19)
என்றார் ஆசிரியர். ஈரிடத்தும் கூறவேண்டியது கூறலேயன்றிக் கூறியது கூறலன்று.
66
அரையளபு குறுகல் மகர முடைத்தே
இசையிடன் அருகும் தெரியுங் காலை
உட்பெறு புள்ளி யுருவா கும்மே
(நூன். 13)
(நூன். 14)
என்னும் இவ் விரு நூற்பாக்களையும், மேற்கூறிய மொழிமரபு நூற்பாக்க ளுடன் ஒப்புநோக்கி உண்மை காண்க.
தொல்காப்பியத்தின் முன்னூல்களான தனித்தமிழ் நூல்களெல்லாம், இயல்பான தமிழெழுத்துகளை மொத்தம் முப்பதென்றே கொண்டு, அவற்றுள் நான்கின் இடவேறுபாட்டாலும் புணர்ச்சி விளைவாலும் ஏற்பட்ட முத் திரிபொலிகளைச் சார்பெழுத்துகளென்றும், இயல்பான மூலமுப்பதை யும் முதலெழுத்துகளென்றும், வேறுபடுத்தி வழங்கினும், முதலெழுத்து களையே முதன்மையாகக் கருதினவென்பது,
'எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர விறுவாய் முப்பஃ தென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே
என்னும் தொல்காப்பிய முதல் நூற்பாவால் அறியக் கிடக்கின்றது.
எல்லா மெய்யொடுங் கூடா ஈருயிரும் உயிரேறா ஒரு மெய்யுமான முச்சார்பெழுத்துகளுள் இரண்டு சற்றுக் குறுகியொலிப்பினும், ஒலித்திரிபே சார்பெழுத்துகளின் சிறப்பியல்பாம். பிற்காலப் பதின்மூன்றாம் நூற் றாண்டினரான நன்னூலார், ஒலிக் குறுக்கமும் நீட்டமும் கலப்புமான இயல்புகளையுஞ் சேர்த்து, சார்பெழுத்துப் பத்தென விரித்தார். இக் கொள்கை தொல்காப்பியருக்கில்லை. ஆயின், ஒலித்திரிபு போன்றே