உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

113


தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

113

சக்கு, சக்கை, சகதி, சங்கு, சச்சரவு, சட்டம், சட்டி, சட்டு, சட்டை, சடங்கு, சடார், சடை, சடைவு, சண்ணு, சண்பு, சண்டி, சண்டு, சண்டை, சணாய், சதக்கு, சதுப்பு, சதை, சந்து, சந்தை, சப்பட்டை, சப்பளி, சப்பாணி, சப்பு, சப்பை, சம்பளம், சம்பா, சம்மணம், சமட்டி, சமம், சமழ், சமை, சர், சரசர, சரட்டு, சரள், சரி, சருகு, சருவு, சரேல், சல்லி, சலக்கு, சலசலப்பு, சலங்கை, சலவை, சலி, சவ்வு, சவட்டு, சவர், சவளி, சவை, சழக்கு, சழி, சள், சள்ளை, சளப்பு, சளார், சளி, சற்று, சறாம்பு, சறுக்கு முதலிய ஏராளமான சகரமுதற் சொற்கள் தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னரே தமிழில் தோன்றின என்பது, எள்ளளவும் இயற்கைக்கு ஏற்காது. ஆரியர் வந்த காலத்தினின்று ஆங்கிலர் வந்த காலம்வரை, தமிழுக்குப் படிப்படியாக மேன்மேலும் கேடு நேர்ந்ததேயன்றி ஆக்கம் நேரவில்லை. தம்மைச் ‘சூத்திரர்' என்றும், தம் மொழியை இழிந்தார் மொழியென்றும் தாமே தாழ்த்திக்கொண்டு, ஆரியரை நிலத்தேவரென்றும் அவரது இலக்கியமொழியைத் தேவமொழி யென்றும் நம்பி, இயன்றவரை தமிழ்ச் சொல்லை வழக்கு வீழ்த்திச் சமற்கிருதச் சொல்லையே மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் வழங்கிவந்த அடிமைத் தமிழர், எங்ஙனம் புதுத் தனித்தமிழ்ச் சொற்களைப் புனைந்திருத்தல் கூடும்?

ஆகவே, கடைக்கழகக் காலச் சகரமுதல் தமிழ்ச்சொற்க ளெல்லாம் ஆரியர் வருகைக்கு முற்பட்ட பழங்காலத்தனவே, இதை,

"சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி

சளிசகடு சட்டை சவளி

-

சவிசரடு

சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும்

வந்ததனாற் சம்முதலும் வை

99

என்னும் மயிலைநாதருரை மேற்கோளாலும் தெளிக.

இனி, துடிசைகிழார் அ. சிதம்பரனார் கருத்துப்படி,

"சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே

அஐஔ எனும் மூன்றலங் கடையே’

என்னும் நூற்பாவின் ஈற்றடிக்கு,

66

""

(தொல். மொழி. 27)

'அவை ஒள என்னும் ஒன்றலங் கடையே” என்னும் பாட வேறு பாடு கொண்டு, ஒள என்னும் ஓருயிரொழிந்த ஏனைப் பதினோருயி ரொடுங் கூடிச் சகர மெய்யும் சொன்முதலாம் என்று பொருள் கூறின், சகரக் கிளவித் தொல்காப்பிய நூற்பா இம்மியும் மயக்கிற்கும் மறுப்பிற்கும் இடமின்றித் தெளிதலும் காண்க.

கூற்று

பிறப்பியல்

“பிறப்பியல் எழுத்துகளின் ஒலிப்பு முறையைப்பற்றிக் கூறுகின்றது. அதன் இறுதி நூற்பா, அவர் நோக்குப் புறநோக்காக வுள்ளதென்றும்,