120
மறுப்புரை மாண்பு
120
மறுப்புரை மாண்பு
66
அலகில்திருப் பதிகஇசை அளவுபடா வகைஇவர்கள்
அன்றி யேயும்
உலகிலுளோ ருந்தெளிந்தங் குண்மையினை அறிந்துய்ய உணர்த்தும் பண்பால்
பலர்புகழுந் திருப்பதிகம் பாடியரு ளப்பெற்றால்
பண்பு நீடி
இலகுமிசை யாழின்கண் அடங்காமை யான்காட்டப் பெறுவன் என்றார்.
"வேதநெறி வளர்ப்பவரும் விடையவர்முன் தொழுதுதிருப் பதிகத் துண்மை
பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்துநூல்
புகன்ற பேத
நாதஇசை முயற்சிகளால் அடங்காத வகைகாட்ட
நாட்டு கின்றார்
மாதர்மடப் பிடிபாடி வணங்கினார் வானவரும்
வணங்கி ஏத்த.
99
வண்புகலி வேதியனார் மாதர்மடப் பிடிஎடுத்து வனப்பிற் பாடிப்
பண்பயிலுந் திருக்கடைக்காப் புச்சாத்த அணைந்துபெரும் பாண னார்தாம்
நண்புடையாழ்க் கருவியினால் முன்புபோல் கைக்கொண்டு நடத்தப் புக்கார்க்
கெண்பெருகும் அப்பதிகத் திசைநரம்பில் இடஅடங்கிற் றில்லை யன்றே.'
ருஞானசம்பந்தரினும் முதியரான திருநாவுக்கரசர், "மாசில் வீணையும்” என்று பாடியிருத்தலானும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழ்முரிப் பண்ணை இசைத்தற்கியலாமைபற்றித் தம் யாழை உடைத்தற் கெழுந்தபோது, அதைத் தடுத்த சம்பந்தர் 'யாழை விட்டுவிட்டு வீணையை மேற்கொள்ளும்' என்னாது, 'திருப்பதிக இசையை இயன்றவரை இயக்கும்’ என்றமையானும்; பாணரும் வேறொரு நரப்புக் கருவியை மேற்கொள் ளாமையானும் அவர் கையாண்டது வீணையொத்த கருவியே யன்றி வேறன்று என்பது துணியப்படும்.
இனி, வீணை எத்துணைச் சிறப்பினதாயினும், அதை இயக்குவோர் எத்துணைத் திறவோராயிருப்பினும், அது எவ்வெவர் மிடற்றிசையையும் இட்டுக் காட்டற்கேற்றது என்பது முற்றும் உண்மையானதன்று. இறைவன் அமைத்த மிடற்றிற்கும் மாந்தன் அமைத்த வீணைக்கும் சிறிதேனும் வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.