உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாணர் கைவழி' மதிப்புரை (மறுப்பு)

127


‘பாணர் கைவழி' மதிப்புரை (மறுப்பு)

127

வேர்ச்சொற்கு ஒலித்தல் சொல்லுதல் என்னும் பொருள்க ளுண்மையானும், அவர்கள் கூற்றும் ஒப்புக்கொள்ளத் தக்கதே.

இனி, முகவீணை என ஒரு குழற்கருவி யிருத்தலானும், அதன் இசை வகையில் வீளையை (சீழ்க்கை யொலியை) யொத்திருத்தலானும், வீணை என்னும் பெயர் மிடற்றிசையையுங் குறித்தலானும், வீளை யென்னும் சொல்லினின்று வீணை யென்னும் பெயர் திரிந்ததோ எனவும் ஐயுறக் கிடக்கின்றது.

விண் என்னும் சொல்லினின்று நீட்டல் திரிபாகவோ, வீளை யென்னுஞ் சொல்லினின்று போலித்திரிபாகவோ, வீணை யென்னும் பெயர் தோன்றியிருக்கக்கூடியது பொருத்தமே. ஒரு பொருள்பற்றித் தென் சொல்லின் வேறாக வழங்கும் வடசொற் சில, தென்சொல்லி னடியாகவே பிறந்திருத்தலின், மேற்கூறிய கூற்று வியப்பிற்கிடமானதன்று.

- "செந்தமிழ்ச் செல்வி" சனவரி 1951