சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரை மறுப்பு
133
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரை மறுப்பு
66
133
‘பத்துடை யடியவர்க் கெளியவன்” என்னும் திவ்வியப் பனுவல் (திருவாய்மொழி 1:3:1) தொடரில், பத்து என்னும் சொல் பத்தி எனப் பொருள்பட்டது காண்க.
வயலைக் குறிக்கும் பற்று என்னும் சொல்லும் பத்து எனத் திரிந் திருப்பது கவனிக்கத்தக்கது. 'பத்தில் ஆறுபோனால் என்ன வாகும்?” என்பது ஒரு விடுகதை.
பற்று என்னும் சொல் பத்தியை அல்லது அன்பைக் குறிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவேண்டுவதில்லை.
"பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.”
என்னுங் குறளே போதியதாகும்.
குற்றியலுகரவீறு இகரவீறாகத் திரிவது பெருவழக்கு.
(குறள். 350)
எ-கா : குச்சு - குச்சி; குஞ்சு - குஞ்சி; பஞ்சு - பஞ்சி; முட்டு - முட்டி இவ்வாறே, பத்து என்னுஞ் சொல்லும் பத்தி எனத் திரிந்துள்ளது. பழைமையான தென்சொற்கட்கெல்லாம் தென்மொழி வழியாகப் பொருள்கொள்ளுதல் வேண்டுமேயன்றி, வடமொழி வழியாகப் பொருள் கொள்ளுதல் கூடாது. அங்ஙனங் கொள்வார் இருட்டுவீட்டில் குருட் டெருமைபோல் இடர்ப்படுவது திண்ணம்.
பத்தினி என்னும் சொல்லைப் பத்நீ என்னும் சொல்லோ டிணைத்தத னாலேயே, முன்னதன் பகுதி பத்து அல்லது பத்தி என்பதை உணர முடியாமற் போயிற்று. அங்ஙனம் உணர முடியாமையினாலேயே, பத்தன் என்னும் ஆண்பாற் பெயர் சென்னைப் பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பெறவில்லை.
க
நூற்றுக்கணக்கான தென்சொற்களை வடமொழியில் கொண்டு அவற்றை வடசொல்லாகக் காட்டுவதும், தூய தென்சொற்கட்கும் ஒலி யொப்புமைபற்றி வடசொன்மூலங் காட்டுவதும், எத்துணை நாட்குச் செல்லும்?
3. “எழுத்து என்பதன் பகுதி எழு என்பதேயன்றி எழுது என்பதன்று என்பது தொல்காப்பியத்தாலறியக் கிடக்கின்றது.
எழுத்து என்பதன் பகுதி எழு என்பதே என்று தொல்காப்பியர் ஓரிடத்துங் கூறவில்லை. எழுத்தொலியுண்டாவதைக் குறிக்குமிடத்து, எழுதல்' ‘எழுவுதல்' முதலிய சொற்களை ஆள்கின்றாரேயன்றி எழுது வதைக் குறிக்குமிடத்தன்று. கருது என்னும் சொல் கருத்து என இரட்டித்துத் தொழிற்பெயரும் தொழிலாகு பெயருமாவதுபோல், எழுது என்னும் சொல்லும் எழுத்து என இரட்டித்துத் தொழிற்பெயரும் தொழிலாகு பெயருமாகும். வரிவடிவு ஒலிவடிவைக் குறிப்பதனாலும், பயிற்சி