உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறுப்புரை மாண்பு


தாய்மொழிப்பற்றே தலையாயப்பற்று

தாய்மொழிப் பற்றில்லாத் தன்னாட்டுப் பற்றே தன்னினங் கொல்லவே தான்கொண்ட புற்றே

மொழியொன் றில்லாமலே இனமொன்று மில்லை னமொன்றில் லாமலே நாடொன்று மில்லை!

மதியுணர் வின்றியே மடிவெனுந் தூக்கம் மயங்கிக் கிடக்கின்றாய் மறுத்தெழு தமிழா!

கரந்தும் அண்டைவீட்டுள் கால்வைத்த லின்றிக் கண்மூடித் தூங்குவாய் கடிதெழு தமிழா!

வருமானங் குன்றியே வறியவ னானாய் வாழ்நாள் வீணாகாமல் வல்லெழு தமிழா!

அருசுவை யுண்டியே ஆக்கிடின் உன்கை அருந்த மறுக்கின்றார் ஆய்ந்தெழு தமிழா!

ஒலியொடு வரியும்பின் ஒழியவே அண்மை உறும்தேவ நாகரி உணர்ந்தெழு தமிழா!

பார்முதல் பண்பாடு பயின்றவன் தமிழன் பலரையும் உறவெனப் பகர்ந்தவன் தமிழன்.

பிறப்பாலே சிறப்பில்லை தமிழா - இதைப் பெருநாவ லன்சொன்னான் தமிழா!

மறத்தாலும் திறத்தாலும் தமிழா மேன்மை மதியறி வொழுக்கத்தால் தமிழா!