குரல் சட்சமே; மத்திமமன்று
7
குரல் சட்சமே; மத்திமமன்று
7
வேறு என்றும், சுரத்திற்கு ஒரு நரம்பாகக் கட்டி எழீஇய யாழ் தமிழரது என்றும், ஒரே நரம்பில் பல சுரம் எழூஉம் வீணை ஆரியரது என்றும் கூறியிருப்பது, தமிழ் நாகரிகத்திற்கும் இசைத்தமிழுக்கும் உண்மைக்கும் மாறாம். வீணையென்னும் பெயர் வேறுபாட்டானேயே யாழ் வேறென்று கொள்வது, விருத்தாசலத்தின் வேறு பழமலை(முதுகுன்றம்) என்று கொள்வதே யாகும்.
4. கரந்தைத் தமிழ்க் கழகத்தினரால் அடிகளார் யாழ்நூல் அண்மையில் வெளியிடப்படும் என்று அறிவிக்கிறார் நண்பர். இது இக்காலத்தில் தமிழைப் போற்றி உண்மையை யெழுதுபவர்க்கு வெளி யீட்டு வசதியில்லை யென்பதைத் தவிர வேறொன்றையும் தெரிவிப்பதாய்த் தெரியவில்லை. யாமும் காலம் வாய்க்கும்போது எம் நூல்களை வெளி யிடுவோம் என்று கூறுவதல்லது வேறென் சொல்லக் கடவேம்! நூல்களைக் கண்டு மயங்குவதோ தெளிவதோ படிப்பார்க்கே தெரிந்துவிடும்.
5. ஏழிசை முறைக்கும் யாழ்நரம்பு முறைக்கும் வேறுபாடு தெரியாமல், முன்னதற்கு ‘உழைமுதற் கைக்கிளை யிறுவாய்க் கட்டி என்பதைச் சான்று கூறுகிறார் நம் நண்பர். எல்லா நூல்களிலும் எப்போதும் ஏழிசை குரல் முதலவாகவே கூறப்படுமென்றும், யாழின் நரப்புமுறை, மரபையும் வாசிப்பாரின் ஆற்றலோடு கூடிய விருப்பத்தையும் பொறுத்த தென்றும் நம் நண்பர்க்கு அறிவுறுத்துகின்றேன். அதோடு சிலப்பதிகாரத்தை மறுபடியும் ஒருமுறை படிக்கத் தூண்டுகின்றேன். இவர் மயக்கப்படியே யாழ் நரப்புமுறையை ஏழிசை முறையாகக் கொள்ளினும், ஏழிசைகள் இளிமுதல என்னும் இவர் கொள்கை யழிந்து ஒவ்வோரிசையும்(சுரம்) ஏழிசைக்கு முதலாம் என்று பெறப்படுதல் காண்க.
ம்
"எழுவகை நிலமாவன: ச ரிகமபதநி என்னு மெழுவகைப்பட்ட எழுத்தடியாகப் பிறக்கும் குரன்முதலாகிய ஏழும்" என்று அடியார்க்கு நல்லார் (சிலப். 14: 152-4) கூறியிருத்தலைக் கண்விழித்துக் காண்க.
6. மத்தளத்திலும் அதன் குறுமையான மிருதங்கத்திலும் அதன் வேறுபாடான தபேலாவிலும் இன்னும் இடக்கண் இளி (மெலிவுப் பஞ்ச மம்) யாகவும் வலக்கண் குர(சமன்சட்சம்) லாகவுமே இருந்து வருகின்றது. இதையறியாமல், இளியென்பது மந்தர ஷட்ஜம் என்று கூறுகிறார் நம் நண்பர். இவர் எந்த மத்தளத்தைப் பார்த்தா ரென்று தெரியவில்லை. மேலும், வலக்கண்ணாகிய குரலை இன்னதென்று திட்டமாய்க் கூறாமல் மழுப்பி விட்டிருக்கிறார்.
7. நரப்புக் கருவிகளில், சுரம் எழும் அல்லது அமைந்த இடத்தை இன்னும் சுரத்தானம்(சுரஸ்தானம்) என்பர். இது வழக்கில் இல்லை என்கிறார் நம் நண்பர். வேற்றுமைகளை எழுவாய் வேற்றுமை செய்பொருள் வேற்றுமை என்று பொருள்பற்றியும், முதலாம் வேற்றுமை இரண்டாம்