உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறுப்புரை மாண்பு


18

மறுப்புரை மாண்பு யென்றும் அறிவார்க்கு த், ட், ற் என்னும் தனி மெய்கள் சொற்குறுப்பாய் நின்று பொருளுணர்த்தும் என்பது நகையாடத்தக்க செய்தியாம்.

இறந்த கால வினைமுற்றுகள் மலையாளத்திற் போன்றே முதற் காலத்தில் இற்றை இறந்தகால வினையெச்ச வடிவிலிருந்து பின்பு ஈரெண் ஐம்பாலீறுகளைப் பெற்றனவாதலின், அவற்றைப் பகுக்கும்போது முதற்கண் எச்சமும் ஈறுமாகவே பகுத்தல் வேண்டும்.

எ-கா:

செய்தான் படித்தான்

செய்து

+

ஆன்

=

படித்து

+

உண்டான்

ஆன்

உண்டு

கொண்டான்

ஆன்

=

கொண்டு

+

கட்டான்

ஆன்

கட்டு

+

தின்றான்

ஆன்

தின்று

+

நின்றான்

ஆன்

கற்றான்

நின்று கற்று

+

ஆன்

+

ஆன்

இங்ஙனம் பகுத்து நோக்குங்கால் எச்சத்தின் இறுதியில் நிற்பது அது என்பதன் முதற் குறையான துவ் விகுதியே என்பதும் அதுவே டுவ்வென்றும் றுவ் வென்றும் புணர்ச்சியால் திரிந்ததென்பதும் புலனாம்.

உள்+து=உண்டு என்பது போன்றதே கொள்+து=கொண்டு என்பதும்.

இல்+து=இன்று என்பது போன்றதே நில் + து = நின்று என்பதும்.

நிலைமொழி யீற்றிலுள்ள ணகர ளகர னகர லகர மெய்கள் அது என்னும் விகுதியோடு புணரின் இயல்பாகவும் துவ்விகுதியொடு புணரின் முறையே டகர றகர மெய்களாகத் திரிந்தும் புணரும்.

எ-கா :

கண் + அது = கண்ணது

தாள் + அது

தாளது

அன் + அது = அன்னது

+

பால் + அது = பாலது

கண் + து

=

கட்டு

தாள் +

+ து

து = தாட்டு

அன் + து

து = அற்று

பால் + து

+ து = பாற்று

புக்கான், சுட்டான், அற்றான் எனப் பகுதி யிரட்டித்து இறந்த காலங் காட்டிய வினைமுற்றுகளையும் புக்கு ஆன், சுட்டு -ஆன், அற்று ஆன் என எச்சமும் ஈறுமாகவே பகுத்தல் வேண்டும்.

-

புக்கான் என்பதில் க் எங்ஙனம் இறந்தகால இடைநிலை யன்றோ, அங்ஙனமே படித்தான் என்பதிலும் த் இறந்தகால இடைநிலையன்று என அறிக.