28
மறுப்புரை மாண்பு
28
மறுப்புரை மாண்பு
மறுப்பு 9 : "தும்மல் ஒலிபோன்று ஆய்த ஒலி தலையில் பிறப்பதை யெப்படி மறுத்தல் இயலும் எனக் கேட்க நேரிடுகின்றது.
அறுப்பு : தும்மல் ஒலிபோன்று எங்ஙனம் ஆய்த வொலி தலையில் பிறக்கும் எனக் கேட்க நேரிடுகின்றது.
மறுப்பு 10 : ஙகரம் மொழிக்கு முதலாகும் எனக் கூறும் ஒரு கட்சி யினரும், ஙகரம் மொழிக்கு முதலாகாது எனக் கூறும் மற்றொரு கட்சி யினரும் இருந்தனர். அவ் விரு சாராரையும் ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே என ஒன்றுபடுத்துதற்கே நன்னூலார்.... கூறிய அதனைக் குற்றமாகக் காட்டினால் அறிஞர் உலகம் ஆதரிக்குமா?”
அறுப்பு : ஙகரம்பற்றி மாறுபட்ட இரு சாராரும் எத்தனை முறை எங்கெங்குப் போரிட்டு எத்தனை பேர் மாய்ந்தனர்? ஒரு பொருளின் இயல்புபற்றி இருவர் அல்லது இரு சாரார் மாறுபடின், அறிஞன் அல்லது ஆ சிரியன், தவறான கருத்துடையாரைத் திருத்துவதா? கோமுட்டிச் செட்டியார் கூற்றுப்போல் மாணவர்க்கு மயக்கமுண்டாகும் வண்ணம் இரு திறம்படக் கூறுவதா?
என்க.
மறுப்பு 11 : "அங்ஙனம் என்று கூறலே தொன்றுதொட்ட மரபாகும்
அறுப்பு : "ஆங்கன மாகிய வாதிரை கையால்" என்று மணி மேகலையிலும்(16, 128), “ஆங்ஙனம் விரிப்பின்” என்று தொல்காப்பியத்தி லும் (1308) வந்திருப்பதால், நெடின் முதல் வடிவமே முந்தியதென்பது பெறப்படும். தொல்காப்பியம் மணிமேகலைக்கு முந்தியதாயினும், ஆங்ஙனம் என்பது ஆங்கனம் என்பதன் திரிபென்பது ஆராய்ச்சியால் தெளிவாம். அங்கிட்டு, இங்கிட்டு என்னும் சொற்கள் முறையே, அங்ஙோட்டு இங்ஙோட்டு என மலையாளத்தில் வழங்குவது கவனிக்கத் தக்கது ஆங்கனம் ஆங்ஙனம் என்னும் வடிவங்களே, முறையே, அங்கனம் அங்ஙனம் எனக் குறுகி வழங்குகின்றன. இங்ஙனமே, இங்கனம் இங்ஙனம் முதலியனவும், இவை யெல்லாம், பாண்டிநாட்டு வழக்கை யறிந்த சொல் லாராய்ச்சியாளர்க்கன்றிப் பிறர்க்குச் செவ்வன் விளங்கா.
மறுப்பு 12 : "இடுகுறிப் பெயர், காரணப் பெயர், காரண இடுகுறிப் பெயர் என்ற இவற்றின் வேறுபாட்டைச் சூடாமணி நிகண்டு முதலிய பண்டைய நூல்களை ஓதியுணர்ந்தவர் மறுக்க முன்வரமாட்டார்.’
""
அறுப்பு : சூடாமணி நிகண்டு மண்டலபுருடன் என்னும் சமணர் 16ஆம் நூற்றாண்டில் தொகுத்த சொற்பொருட்டொகுதி. அது இலக்கண நூலுமன்று, பண்டைய நூலுமன்று. ஆதலால், அதை அளவையாகக் கொள்பவர் தமிழியல்பை யறியார் என்பது தேற்றம்.