பேரா. தெ.பொ.மீ. தமிழுக்கதிகாரியா?
63
பேரா. தெ.பொ.மீ. தமிழுக்கதிகாரியா?
63
முருங்கை என்னும் சொல், மலையாளத்தில் முரிஞ்ஞ என்றும், தெலுங்கில் முனக என்றும், சமற்கிருதத்தில் முருங்கீ என்றும் திரிந்து வழங்குகின்றது. ஐகார வீற்றுத் தமிழ்ச்சொற்கள் பொதுவாய் ஆரிய மொழிகளில் ஆகாரவீறாய் நிற்கும். அம் முறைப்படி, ஆரியச் சார்பான சிங்களத்திலும், முருங்கை என்பது முருங்கா எனத் திரிந்தது. சமற்கிருதச் சொல் 'வேத ஆரியர் தமிழ்நாட்டுக்கு வந்தபின் கடன்கொண்டதால், முருங்கீ என்னும் வடிவு கொண்டது. உண்மை இங்ஙனம் இருக்கவும், முருங்கீ என்னும் சமற்கிருதச் சொல்லே சிங்கள மொழியில் முருங்கா எனத் திரிந்ததென்றும், பின்பு அது தமிழில் முருங்கை எனப் புகுந்ததென்றும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியில், பிராமணரான மு.இராகவையங்காரும் கோடரிக்காம்பான வையாபுரியும் கூடித் தலை கீழாய்க் குறித்திருப்பதை, ஆயிரக்கணக்காய்ச் சம்பளம் வாங்கிக்கொண்டு தமிழைப் பேணாத பேடித் தமிழ்ப் பேராசிரியர் கவனிப்பாரா?
ல
ரு
முருங்கை, முருக்கு என்னும் இரு பெயரும் தொன்றுதொட்டு இரு வகை வழக்கிலும் வழங்கி வரும் தமிழ்ச்சொற்களாகும். முருக்கைப் புனமுருக்கு, புனமுருங்கை என்பதுமுண்டு.
முதலிரு கழக நூல்களனைத்தும் கடைக்கழக நூல்களிற் பலவற் றொடு இறந்துபட்டமையால், இன்று சில பழந் தமிழ்ச்சொற்கட்கு இலக்கியச் சான்று காட்ட இடமில்லை. தொல்காப்பியம் இலக்கண நூலேயன்றி அகர முதலியன்று. இதைப் பலர் உணர்வதில்லை.
16. "சீனர்களோடும் நமக்குத் தொடர்பு உண்டு. படகுவகையைச் சேர்ந்த சம்பான் என்ற சொல்லும், பெரிய மண்கலத்தைக் குறிக்கும் 'காங்கு என்ற சொல்லும், 'பீங்கான்' என்ற சொல்லும், நாம் விரும்பும் சீனப் பட்டைப்போலச் சீனநாட்டிலிருந்து வந்தவையே ஆம்."
குமரிக்கண்டத் தமிழர் நீர்வழியும் நிலவழியும் உலக முழுதும் சுற்றினவர். அல்லாக்கால், வடவையைக் கண்டிருக்க முடியாது; ஞாலத்திற் கும் உலகம் என்று பெயரிட்டிருக்க முடியாது.
உலகில் முதன்முதல் நீர்வழிச் செல்லக் கலம் புனைந்தவரும், கடலைக் கடந்தவரும் தமிழரே. நாவாய் என்ற தமிழ்ச்சொல்லே navis என்றும், படகு என்ற தமிழ்ச்சொல்லே barca, அல்லது barga என்றும் இலத்தீனில் திரிந்துள்ளன. Navy, bark, barge என்ற ஆங்கிலச் சொற்கள் இலத்தீனினின்றும் திரிந்தவை. கோதியத்தில் skip என்றும், மூதாங்கிலத்தில் scip என்றும், மூதுயர் செருமானியத்தில் scif என்றும், ஆங்கிலத்தில் ship என்றும், வழங்குவதும் கப்பல் என்னும் தென்சொல்லின் சிதைவே.
கப்பலும் நாவாயுமல்லாத சிறுகலங்கள், பரிசல், ஓடம், அம்பி, பஃறி, திமில், தோணி, படகு முதலியனவாகப் பல வகைய.
7