உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரா. தெ.பொ.மீ. தமிழுக்கதிகாரியா?

67


பேரா. தெ.பொ.மீ. தமிழுக்கதிகாரியா?

67

சொல் - சோல் சோர். சோர்தல்= உள்ளிருந்து கசிதல், வடிதல், விழுதல், தளர்தல், சோர்(க.), சோலு (தெ.).

சோர்

சோரி-வடியும் அரத்தம்.

சோல் - (சோன்) - சோனம் = சொரியும் முகில்.

சோன் - சோனை = பெருமழை வீழ்ச்சி, கார்முகில்.

சோனையா (ம்) மாரி-சோனாமாரி.

இச் சொற்களால், சுருங்கை என்பது சுல் என்னும் அடிவேரினின்று, தோன்றி, சுரி என்னும் சொல்லோடு தொடர்புடையதாய், துளைக்கப்பட்டது என்னும் பொருளில் கீழ்நில வழியைக் குறிக்கும் என்பது தெளிவாம். கன்னல்

கல்லுதல் = கில்லுதல், தோண்டுதல், குடைதல்.

"மலைகல்லி எலிபிடிக்கிறது” என்பது ஒரு சொலவடை.

கல் -கலம் = மரம், கல் முதலியவற்றிற் குடைந்து செய்யும் ஏனம், தோணி.

கல் - கன் = உட்குழிந்த துலைத்தட்டு, செப்புக் கலம், செப்புக்கலத் தொழில், செம்பு.

கன்-கன்னான் = செப்புக்கலம் செய்யும் கம்மாளன்.

கன்-கன்னம்

=

துளையுள்ள காது, காதை யடுத்த அல்லது உட்குழிந்த கதுப்பு (ஒ.நோ: செவி-செவிடு = காதை யடுத்த கன்னம்), துலைத்தட்டு, கள்வர் சுவரிலிடும் துளை. "செவிட்டைக் கட்டி அடித்தான்” என்னும் வழக்கை நோக்குக. கன்- கன்னல் = 1. நீர்க்கலம். "தொகுவாய்க் கன்னல் தண்ணீ ருண்ணார்” (நெடுநல். 65).

2. நாழிகை வட்டில்.

66

“கன்னலின் யாமங் கொள்பவர்” (மணிமே. 7 : 65).

3. நாழிகை வட்டிலால் அறியப்படும் கால அளவு.

4. உட்டுளையுள்ள புல்வகையைச் சேர்ந்த நாணற்கரும்பு.

5. கருப்பஞ் சாற்றிலிருந்து செய்யப்படும் சருக்கரை அல்லது கற்கண்டு.

6. சருக்கரை கலந்து அடும் அடிசில் (பாயசம்).

ஒ.நோ. : நுள் - நள்-நாளம் = உட்டுளை, உட்டுளையுள்ள தண்டு நள்-நாள்-நாளி-நாழி உட்டுளையுள்ள மூங்கிற்படி, படி, அம்புப்

=