உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

செந்தமிழ்ச் சிறப்பு ல்லை. எனக்கே அழைப்பும் அறிவிப்பும் இல்லாவிடின், என்னினும் பன்மடங்கு அறிவும் ஆற்றலும் பெற்ற மறைமலையடிகள் இன்று இருந்திருப்பாராயின், அவருக்கு எங்ஙனம் அழைப்பு விடுத்திருப்பர்? அவருக்கு அழைப்பில்லாத உலகத் தமிழ் மாநாடொன்று இவ் வுலகில் நடைபெறுமாயின், அது எத்தகையதா யிருக்கக்கூடும்?

தமிழ்நாட்டில் நடைபெறும் மாநாடுகட்கே எனக்கு அழைப்பு வந்தது. அதுவும், முந்தின மாநாட்டில் மாண்புமிகு அண்ணாதுரையாலும், இம் மாநாட்டில் மாண்புமிகு ம.கோ. இரா.வாலுமே எனக்குக் கிட்டிற்று.

உலகத் தமிழ் மாநாடுகள் தோன்றுமுன் சிந்துவெளி நாகரிகம் திரவிடரதென்று பின்னிய இரசிய ஆராய்ச்சி யறிஞரால் தீர்க்கப்பட்டிருந்தது. பின்போ, அம் முடிபு வன்மையாக மறுக்கப்பட்டு வருகின்றது.

ஆதலால் மாண்புமிகு அழகமதியாரே (இராமச்சந்திரனாரே) இக் குழுவைக் கலைத்து மாநாடு நடத்தும் உரிமையைக் கைப்பற்றி, மதுரையில் நிறுவவிருக்கும் தமிழ்க் கழகத்தைத் துணைக்கொண்டே ஐயாட்டை யிறுதி உலகத் தமிழ் மாநாடுகளை ஒழுங்காக நடத்தி வருவாராக.

“செந்தமிழ்ச் செல்வி” நவம்பர் 1980