உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு

107

ஆரியப் பூசாரியர், தம்மைப் போற்றிக் காத்த தமிழரை நன்றி கெட்ட தனமாக நால்வகைப் பிறவிக் குலமாகப் பிரித்து, அவர் ஒற்றுமையைக் குலைத்துப் பகுத்தறிவிலிகளாகத் தாழ்த்தியது மன்றி, அவர் முன்னோரின் விலைமதிப்பில்லா எழுநிலச் செய்யுளிலக்கணத்தையும் முத்தமிழிலக் கணத்தையும் முற்றும் அழித்துவிட்டனர். அங்ஙனமிருந்தும்,

66

'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

99

என்பதற் கேற்பப் பழிக்குப் பழி வாங்காது,

(குறள். 110)

66

'இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு

(குறள். 987)

என்னும் உயர்நெறியைக் கடைப்பிடித்துச் சான்றாண்மை பூண்டொழுகும் தமிழ்ப் புலவரையும் சற்றும் பொருட்படுத்தாது, குமரிநாட்டுக் கொள்கை புலவர் புனைந்துரையென்றும், அதைத் தூள்தூளாக்குவே மென்றும் வாய் காவாது வரம்பிறந்து சொல்வளர்ப்பது, தம்மைத் தமிழர் தூள்தூளாக்கும் நிலைமையைத் தாமே வலிய வருவிப்பது போன்றதேயாகும்.

பண்டையாரியப் பூசாரியரின் இரண்டகச் செயல் விளைவை நன்குணர்ந்து அதைத் தடுப்பதற்கே, வாய்மையும் நடுநிலைமையும் வாய்ந்த (P.T.) சீநிவாசையங்காரும் (V.R.) இராமச்சந்திர தீட்சிதரும் Stone Age in India, History of the Tamils, Pre-Historic South India, Origin and Spread of the Tamils முதலிய அரிய வரலாற்றாராய்ச்சி நூல்களை வரைந்து போந்தனர். அவற்றை, ஆரிய வெறிபிடித்த நீலகண்ட சாத்திரி யாரும், அடிமைத் தனத்திற் பிறந்து வளர்ந்த பாலகிருட்டிண நாயரும், எத்துணை மாற்றியெழுதினும் உண்மை ஒருபோதும் மறையாது. "எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேற்படும்” (“Oil and truth will get uppermost at last).

தமிழரும் பிராமணரும் தழுவி வாழ்தல்

பிராமணரின் முன்னோர், தமிழகத்திற் புகுந்து மூவாயிரம் ஆண்டா கின்றது. அவர் தமிழர்க்குப் பயன்படும் கல்வியராகவும் வரவில்லை; செல்வராகவும் வரவில்லை; பொருமறவராகவும் வரவில்லை; பெருந் தொகையராகவும் வரவில்லை; ஒவ்வொருவராகவும் சிற்சிலராகவும் கையுங் காலுமாக வந்தனர்.

தமிழர், அகத்தியர் முதலான ஆரியரை வரவேற்று, திருக்கோவிலி லும் திருமடத்திலும் ஊட்டுப்புரையிலும் ஊர்ச் சத்திரத்திலும் உறையு ளளித்து, அவியுணவும் செவியுணவும் ஆரவூட்டி அறிஞராக்கினர். ஆரியர் தமிழ் நெடுங்கணக்கினின்று வடமொழி வண்ணமாலை வகுத்து, ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்களை வேத மொழியொடு சேர்த்தும், தூய